பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

punnaku-keera

நாம் சாப்பிடும் உணவுகளில் கீரை வகைகள் எப்போதுமே நமக்கு நன்மைகளை தருவதாகவும் நோய்களை நீக்கும் அருமருந்தாகவும் இருக்கின்றன பலவகையான கீரைகள் இருந்தாலும் ஒருசில கீரைகளை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம் கிராமப்புறங்களில் பல வகை கீரைகள் விளைகின்றன அதில் ஒன்றுதான் பிண்ணாக்குக் கீரை பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

punnaku keerai

பிண்ணாக்குக் கீரை பயன்கள்

புற்று நோய்
பிண்ணாக்கு கீரை ஒரு சித்த மருத்துவ மூலிகையாகும். மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை இக்கீரை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உணவில் தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.

விஷ கடி

நமது வீடு மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருக்கும் தோட்டங்கள், புதர்களில் தேள், பூரான்,தேனீ, விஷ வண்டுகள் போன்றவை அதிகம் இருக்கின்றன. அவற்றினால் கடிபட்ட நபர்கள் அந்த பூச்சிகளின் நச்சு ரத்தத்தில் கலந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இத்தகைய ஒவ்வாமை பிரச்சனை நீக்கவும், விடம் பரவாமல் தடுக்கவும் பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டால் நமது உடலில் பரவும் விஷ பூச்சிகளின் நச்சு முறியும்.

punnaku keerai

- Advertisement -

செரிமான சக்தி

பலருக்கும் தாங்கள் சாப்பிடும் உணவுகளை சரியாக செரிமானம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்க பெறுவார்கள்.

கல்லீரல்

அதிகம் மது, போதை பொருட்களை பயன்படுத்துதல், தவறான உணவு பழக்கம் கொண்டவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடும். இப்படிப்பட்டவர்கள் மேற்கண்ட பழக்கங்களை நிறுத்துவதோடு அடிக்கடி பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.

punnaku keerai

மூலம்

இன்றைய காலத்தில் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக மூலம் நோய் இருக்கிறது. அதிகம் காரமான உணவுகளை உண்பது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இந்த மூல நோயை விரைவில் போக்குவதிலும், அந்த மூலத்தினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதிலும் பிண்ணாக்கு கீரை சிறப்பாக செயல்படுகிறது. எனவே மூல பாதிப்புள்ளவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி உண்ண வேண்டும்.

வாயு தொந்தரவுகள்

வாதம் தன்மை அதிகம் கொண்ட உணவுகளை உண்பதால், வயிற்றில் வாயுவின் தன்மை அதிகம் ஆகி சிலருக்கு வாயுக்கோளாறுகள் ஏற்படுகின்றது. பிண்ணாக்கு கீரை உடலின் வாத தன்மையை சீராக்கி வாயு கோளாறுகளை சீர் செய்து உடலை ஆரோக்கியம் பெற செய்கிறது. எனவே அடிக்கடி பிண்ணாக்கு கீரையை சாப்பிட்டுவிரைவில் வருபவர்களுக்கு வாயு கோளாறுகள் நீங்கும்.

punnaku keerai

சிறுநீரகங்கள்

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட பிண்ணாக்கு கீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவும் பேருதவி புரிகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் இரண்டு முறை பிண்ணாக்கு கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது.

ஆண்மை குறைபாடு

இன்றைய காலத்தில் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. பிண்ணாக்கு கீரை சாற்றில் அமுக்கிரா கிழங்கை ஊற வைத்து, பிறகு காய வைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் பலம் பெருகும். ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும்.

punnaku keerai

நோய் எதிர்ப்பு

உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போதுபிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்ததால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது.

இதையும் படிக்கலாமே:
தண்டு கீரை பயன்கள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Punnakku keerai benefits in Tamil. It is also called as Punnakku keerai nanmaigal in Tamil or Punnakku keerai maruthuvam in Tamil or punnakku keerai palangal in Tamil.