புண்ணியத்தை சேர்ப்பதற்கு இதை விட சுலபமான வழி இந்த உலகத்தில் வேறு எதுவுமே இருக்க முடியாது.

wakeup-cow
- Advertisement -

நம்முடைய சந்ததியினருக்கு சொத்துக்களை சேர்த்து வைக்கின்றோமோ இல்லையோ, பாவத்தை சேர்த்து வைக்கக் கூடாது. நம்மால் முடிந்தவரை புண்ணிய காரியங்களைச் செய்வோம். நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர் நலமாக வாழ, நம்மால் முடிந்த நன்மைகளை நாம் வாழும் போது செய்து கொண்டே இருக்க வேண்டும். நாம் செய்யக் கூடிய நன்மைகள், நம்முடைய சந்ததியினருக்கு வரக்கூடிய பிரச்சனையின் தாக்கத்தை குறைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இந்த புண்ணிய காரியம் என்றால் என்ன? அதை நாம் தினசரி வாழ்நாளில் எப்படி செய்வது? இதற்கான சுலபமான ஒரு வழியை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thanam

அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் ஒரு புண்ணிய காரியத்தை செய்வதற்கு எந்த ஒரு பயமும் இல்லாமல், முன்னே வந்து நிற்பார்கள். இந்த காலத்தில் புண்ணிய காரியம் என்று நாம் ஏதாவது ஒன்றை செய்ய ஆரம்பித்தாலே, அதன் மூலம் பிரச்சனைகள் வந்து விடுமோ என்று நினைக்கும் அளவிற்கு வாழ்க்கை சூழலை நமக்கு மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆக, நீங்கள் உங்களுடைய வாழ்நாளில் புண்ணிய காரியத்திற்கு என்று தனியாக எதையும் ஒதுக்க கூட தேவையில்லை. காலையில் கண் விழிக்கும் போதே, இன்று யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். முடிந்தவரை கடுஞ்சொற்களை பிரயோக படுத்தக்கூடாது. நமக்கு தவறிழைப்பவர்களாக இருந்தாலும் கூட அந்த தவறை அவர்களுக்கு சுட்டிக்காட்டும் போது, அடுத்தவர்களுடைய மனது நோகக்கூடாது என்றவாறே நினைத்துக் கொண்டு, கண் விழித்தால் மட்டுமே போதுமானது. இதெல்லாம், இந்த காலத்தில் நடக்கக் கூடியதா? என்று எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். இதுவே புண்ணிய காரத்திற்கு முதலில் பிள்ளையார் சுழியாக சொல்லப்பட்டுள்ளது.

sleep

முடிந்தவரை இன்றைய தினம் வாயில்லா ஜீவன்களுக்கு, ஏதாவது ஒரு ஜீவராசிகாவது உதவி செய்ய வேண்டும், உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எந்திரிக்க வேண்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் மட்டும் இருந்தால் போதுமா புண்ணியங்கள் வந்து சேர்ந்து விடுமா? என்று சிலர் சிந்திக்கலாம். நல்ல எண்ணமே, நல்ல செயல்களாக மாறுகிறது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனதில் நாம் எதை விதைக்கிறோமோ, அது தான் முளைக்கும். நம்முடைய எண்ணங்கள் எந்த அளவிற்கு பக்குவப்படுகிறதோ அந்த அளவிற்கு நம்முடைய செயல்பாடுகளும் பக்குவப்படும்.

- Advertisement -

நாம் செய்யக்கூடிய தவறுகளை, நம் எண்ணங்கள் குறைக்க ஆரம்பிக்கும். தானாக உங்களது பாவக்கணக்கு குறைந்துவிடும். தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக இன்று நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு புண்ணிய காரியம் செய்தோமா என்று, நினைவு கூர்ந்து பாருங்கள். உங்களுக்கு அந்த புண்ணிய காரியத்தை செய்யக்கூடிய வாய்ப்பு அளித்த இறைவனுக்கு தினமும் இரவு தூங்கும் போது நன்றி சொல்வதும், ஒரு புண்ணிய காரியம் தான்.

crow

இதோடு காலையில் கண் விழிக்கும் போது உங்களது கண்களுக்கு எதிரே பசு மாடு படம், பறவைகள் படம், அல்லது குதிரை படம், நாயின் படம், அல்லது ஆடு இப்படிப்பட்ட ஜீவராசிகளின் முகத்தில் நீங்கள் விழிக்க வேண்டும். வெறுமனே இவைகளின் முகத்தில் முழிப்பதை விட, இன்று நம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நினைப்போடு இவைகள் முகத்தில் விழிக்க வேண்டும்.

- Advertisement -

7-horse1

இப்படியாக வாயில்லா ஜீவன்களின் முகத்தில் நாம் விழிக்கும்போது, அவைகளின் முகத்தை பார்த்த பின்பு நாம் மனதில் எண்ணுகின்ற எண்ணங்கள் ஓட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று சாஸ்திரத்தில் சொல்லப் படுகின்றது. ஏனென்றால் இப்படிப்பட்ட வாயில்லா ஜீவன்களின் உருவத்தில் இறை சக்தி நிறைந்து இருப்பதாகவும் நம்முடைய சாஸ்திரம் சொல்கின்றது. முயற்சி செய்து பாருங்கள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு.

இதையும் படிக்கலாமே
இந்த 3 பொருட்களை சேர்த்து உங்கள் நில வாசப்படியில் கட்டிவிட்டால் போதும். கடன் கேட்டு உங்கள் வீட்டிற்குள்ளும் யாரும் வர மாட்டாங்க! நீங்களும் கடன் கேட்டு யார் வீட்டிற்கும் போகும் சூழ்நிலை ஏற்படாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -