- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி சனிக்கிழமை லட்சுமி நரசிம்மர் வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை லட்சுமி நரசிம்மர் வழிபாடு

- Advertisement -

இன்று புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. சுவாதி நட்சத்திரத்தோடு சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் லட்சுமி நரசிம்மரை எவர் ஒருவர் வழிபாடு செய்கிறாரோ, அவருக்கு கடன் என்பது நிச்சயம் இருக்காது. லட்சுமி நரசிம்மருக்கு இந்த ஒரு பொருளை நெய்வேதியம் ஆக வைத்து, அதை உங்கள் கையால் நாலு பேருக்கு தானம் செய்யும் போது, ஒவ்வொரு பிரசாதத்திற்கும் ஒவ்வொரு லட்ச ரூபாய் கடன் குறையும். ஒவ்வொரு லட்ச ரூபாயாக செல்வ வளம் பெருகும். இது ஒரு பெரிய நம்பிக்கை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த எளிமையான வழிபாட்டை இன்று மாலை செய்து பலன் அடையலாம்.

லட்சுமி நரசிம்மர் வழிபாடு

இந்த பதிவை படித்த உடனேயே கருப்பு கொண்டை கடலையை சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். அப்போதுதான் அது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் நன்றாக ஊறிவிடும். இன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த கொண்டைக்கடலை சுண்டலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் 10 விசில் விட்டால், சுண்டல் மணல் போல வெந்து தயாராகி இருக்கும்.

- Advertisement -

லேசாக தாளித்து அதை ஒரு கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். லட்சுமி நரசிம்மரை மனதார நினைத்து விளக்கு ஏற்றுங்கள். ‘ஓம் நமோ லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி உதிரி புஷ்பங்களால் அர்ச்சனை செய்யுங்கள். இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து உங்களுடைய வேண்டுதலை லட்சுமி நரசிம்மரிடம் சொல்லுங்கள். கடன் சுமை குறைய வேண்டும் செல்வ வளம் பெருக வேண்டும். நான் எப்போதும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

பூஜையை முடித்துவிட்டு பூஜையறையில் வைத்திருக்கும் சுண்டலை கொண்டு போய் நாலு பேருக்கு தானமாக கொடுக்க வேண்டும். கோவிலில் வாசலில் யாசகம் கேட்பவர்கள் இருப்பாவர்கள் அவர்களுக்கு கொண்டு போய் இந்த சுண்டலை ஒரு தொண்ணையில் வைத்து 11 பேருக்கு தானம் செய்து விட்டால் உங்களுடைய கடன் சுமை அன்றோடு குறைந்துவிடும்.

- Advertisement -

தானம் செய்யும் போதும் ‘ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லிச் சொல்லி தானம் செய்யுங்கள். மனதிற்குள் லட்சுமி நரசிம்மரை நினைத்துக் கொண்டே கருப்பு கொண்டே கடலையை இன்று உங்கள் கையால் தானம் செய்தால் கடன் சுமையெல்லாம் உங்களை விட்டு விலகி சென்று விடும் என்பது நம்பிக்கை. மிக மிக எளிமையான பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரம். இதை இன்றைய தினம் நீங்கள் செய்துவிட்டால் உங்களுடைய கஷ்டம் இன்றோடு முடிந்தது என்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளலாம். அந்த லட்சுமி நரசிம்மரின் பாதங்களை வணங்கி இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்