புரட்டாசி பிரதோஷமான இன்று சிவனை வழிபட்டால் இத்தனை பலன்களா

siva
- Advertisement -

பன்னிருமாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த நல்லொதொரு மாதத்தில் சிவனுக்குரிய பிரதோஷ தினம் மிகவும் சக்தி வாய்ந்த தினமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மிக புனிதமான நாளாக கருதப்படும் வெள்ளிக்கிழமையில் இந்த பிரதோஷ நாள் வருவதால் அதற்கு வலிமை அதிகம். இந்த நன்னாளில் நாம் என்ன செய்து நல்லது? எப்படி இறைவனை வழிபட்டால் நமக்கு நன்மைகள் பல கிடைக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

sivan (1)

இந்த நன்னாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து, காலை முதல் சிவ சிந்தனையில் இருப்பது நல்லது. முடிந்தவரை “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை ஜபித்தவாறே வேலைகளை செய்யலாம். பிறகு பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை சிவன் கோயிலிற்கு சென்று, சிவனுக்கு பாலால் ஆதிஷேகம் செய்யலாம். அபிஷேகத்திற்கு தேவையான பால், பழம், தேன், இளநீர், தயிர் போன்றவற்றை உங்களால் முடிந்த அளவிற்கு வாங்கியும் தரலாம். அதோடு வில்வம் சாற்றி நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

- Advertisement -

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோசத்தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் மிக பெரிய பலன்களை பெற முடியும். அதோடு இன்றைய பிரதோஷ தினத்தில் திருமாலின் அவதாரமான நரசிம்ம மூர்த்தியை வழிபடுவதன் மூலமும் நல்லதொரு பலனை பெறலாம்.

sivan-6

பலன்கள்:
இன்று சிவனை வழிபடுவதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும், பிறவி கடன் மற்றும் நம் வாழ்க்கை ஏற்பட்டுள்ள அத்துணை கடனும் தீர்ந்து மகாலட்சுமின் பரிபூரண அருளாசி கிடைக்கும். இன்றைய நாளில் அன்னதானம் அளிப்பதன் மூலம் நமது மனமானது சஞ்சலங்களில் இருந்து விலகி நிம்மதி அடையும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
இந்த வருடத்தில் வரும் அனைத்து பிரதோஷ நாட்களில் விரதம்.

English overview:
Here we have Puratasi Pradosham details in Tamil.

- Advertisement -