- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி இரண்டாம் வெள்ளிக்கிழமை வழிபாட்டு முறை

புரட்டாசி இரண்டாம் வெள்ளிக்கிழமை வழிபாட்டு முறை

- Advertisement -

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கிழமையும் விசேஷமான கிழமை ஆகவே திகழ்கிறது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் சந்திரன் தன்னுடைய சொந்த வீடான கடகத்தில் வீற்றிருக்கிறார். புதன் தன்னுடைய சொந்த வீடான கன்னியில் வீற்றிருக்கிறார். சுக்கிரன் தன்னுடைய சொந்த வீடான துலாமில் வீற்றிருக்கிறார். சனி தன்னுடைய சொந்த வீடான கும்பத்தில் வீற்றிருக்கிறார். இப்படி நான்கு கிரகங்களும் அவர்களுடைய சொந்த வீட்டில் வீற்றிருப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.

அதனால் அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய இந்த எளிமையான வழிபாட்டு முறை நம்முடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்க வல்லதாக திகழ்கிறது. குடும்பத்தில் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒற்றுமை இல்லாமல் சண்டைகள் வந்து கொண்டே இருந்தாலும், இந்த வழிபாட்டை செய்யும் பொழுது குடும்பம் நிம்மதியுடனும், மகிழ்ச்சிகரமாகவும் திகழும். அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

புரட்டாசி இரண்டாம் வெள்ளிக்கிழமை வழிபாட்டு முறை

செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரண்டாவது வெள்ளிக்கிழமை வருகிறது. வெள்ளிக்கிழமை என்றாலே வீட்டில் சிறப்பான வழிபாட்டு முறைகள் நடைபெறும். அன்றைய தினத்தில் எப்பொழுதும் போல் வீட்டில் பூஜை செய்வதோடு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதன் மூலம் குடும்பத்தில் எந்தவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல் நிம்மதியுடன் வாழ முடியும். அதிலும் குறிப்பாக கடக ராசிக்காரர்கள் இந்த வழிபாட்டை கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

அருகில் இருக்கக்கூடிய வள்ளி தெய்வானை சமேத முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது வள்ளி, தெய்வானை, முருகன் இவர்கள் மூவருக்கும் மாலை வாங்கி தர வேண்டும். பிறகு இவர்களுக்கு முன்பாக புதிதாக வாங்கிய 27 அகல் விளக்குகளை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரிகளை ஒன்றாக இணைத்து தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிறகு முருகப்பெருமானை 27 முறை வலம் வர வேண்டும். இப்படி வலம் வந்த பிறகு அந்த கோவிலில் இருக்கக்கூடிய 27 நபர்களுக்கு தங்கள் கைகளால் அன்னதானம் வழங்க வேண்டும். 27 நபர்களுக்கு அன்னதானம் தர இயலாது என்று நினைப்பவர்கள் ஒன்பது நபர்களுக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் அந்த நட்சத்திரத்தில் எந்த தோஷம் இருந்தாலும் அவை அனைத்தும் சரியாகும்.

மேலும் சேரக்கூடாத நட்சத்திரங்கள் சேர்ந்திருக்கும் வீட்டில் ஏற்படக்கூடிய சண்டைகளும், சச்சரவுகளும், மன குழப்பமும் நீங்கி நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும். இதோடு மட்டுமல்லாமல் இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் பெண் சாபம் ஏதாவது இருந்தாலும் அவையும் நீங்கும் என்று கூறப்படுகிறது. குடும்பத்தில் நிம்மதி ஏற்பட்டாலே மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிடுவாள். அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். செல்வ செழிப்புடன் நிம்மதியாக வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே:எதிர்மறை ஆற்றல்கள் விலக குலதெய்வ வழிபாடு

முருகப்பெருமானை மனதார நினைத்து இந்த முறையில் புரட்டாசி இரண்டாம் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்பவர்களுக்கு குடும்பத்தில் அனைத்து விதமான மகிழ்ச்சியும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்