- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி புதன் கிழமை வழிபாடு

புரட்டாசி புதன் கிழமை வழிபாடு

- Advertisement -

புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இதில் பலரும் புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாளை வழிபாடு செய்வார்கள். எந்த அளவிற்கு புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறதோஅந்த அளவிற்கு புரட்டாசி புதன் கிழமையும் பெருமாளுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் புதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் மாதம் என்று கூறப்படுகிறது. மேலும் புதன் பகவானின் அதி தேவதையாக கருதக்கூடியவர் பெருமாள் என்பதால் புரட்டாசி புதன்கிழமை என்பது மிகவும் விசேஷமான ஒன்று. அப்படிப்பட்ட புரட்டாசி புதன் கிழமை அன்று எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

புரட்டாசி புதன் கிழமை வழிபாடு

புதன் பகவானை ஞானகாரகன் என்று கூறுவோம். ஒருவர் சிறப்பான புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும் என்றால் அவருக்கு புதன் பகவானின் அருள் என்பது வேண்டும். அப்படி புதன் பகவானின் அருளை பெற்ற நபர்கள் படிப்பிலும், விளையாட்டிலும், மற்ற திறமைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் புதன்கிழமை அன்று புதன் பகவானே வழிபாடு செய்தால் அவர்கள் படித்து சிறந்து விளங்குவார்கள் என்று கூறப்படுகிறது. படிக்கும் பிள்ளைகள் மட்டும் தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் புதன்கிழமை அன்று புதன் பகவானை வழிபாடு செய்யும்பொழுது அவர்கள் சிறப்பாக யோசித்து செயலாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

புதன்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் நிற மலர்களால் அவருக்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு துளசி மாலையை வாங்கி போட வேண்டும். படிக்கும் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அந்த பிள்ளைகள் கையால் இந்த மாலையை போடச் சொல்வது என்பது மிகவும் விசேஷம். பிறகு ஒரு அகல் விளக்கை எடுத்து அதில் நெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு “ஓம் நமோ நாராயணாய நமஹ” என்னும் மந்திரத்தை சற்று சத்தமாக 21 முறை உச்சரிக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு பெருமாளுக்கு நெய்வேத்தியமாக பச்சைப்பயிறு சுண்டல், பச்சைப் பயறு சாதம், பச்சை பயறு பாயசம் என்று பச்சை பயறுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக பெருமைகளுக்கு வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய படிக்கும் பிள்ளைகள் காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு எதுவும் சாப்பிடுவதற்கு முன்பாக பெருமாளுக்கு தங்கள் கைகளால் துளசி இலைகளை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். எதை செய்வதாக இருந்தாலும் யோசித்து செய்வார்கள். ஞாபக சக்தி அதிகரிக்கும். அன்றைய தினம் இயன்றவர்கள் காலையிலிருந்து திரவ உணவுகளை மட்டும் உட்கொண்டு மாலை நேரத்தில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது சிறப்பு.

இதையும் படிக்கலாமே:செலவு குறைய புரட்டாசி வழிபாடு
புதன் பகவானின் அருளையும் பெருமாளின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு புரட்டாசி புதன்கிழமை அன்று வழிபாடு செய்து நல்ல தெளிவான அறிவை பெற்று சிறப்புடன் வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்