உங்க புருவத்தில் ரோமம் குறைவாக இருக்கா? அப்படின்னா நீங்க ரொம்ப ஆபத்தானவர்களா? சாமுத்திரிகா லட்சணம் கூறும் உண்மை என்ன?

eye-brow-astrology
- Advertisement -

சாமுத்திரிகா லட்சணம் என்பது ஒருவருடைய அங்க அடையாளங்கள் மற்றும் லட்சணங்களை வைத்து அவர்களுடைய குணத்தையும் வாழும் வாழ்வையும் கணித்துக் கூறும் ஒரு எளிய ஜோதிட கணிப்பாக இருந்து வருகிறது. ஒருவருடைய கண் எப்படி இருக்கிறது? புருவம் எப்படி இருக்கிறது? என்று ஒவ்வொரு அங்கத்தையும் வைத்து கணித்துக் கூறும் இந்த ஜோதிட கணிப்பு ரொம்பவும் சுவாரஸ்யமானதாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஒருவருடைய புருவத்தில் ரோமங்கள் குறைவாக இருந்தால் சாமுத்திரிகா லட்சணம் என்ன கூறுகிறது? அவர்கள் ஆபத்தானவர்களா? என்பதைத் தான் இந்த ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சாமுத்திரிகா லட்சணம் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களையும் குறிப்பிட்டு கூறுகிறது. ஒருவருடைய அங்க லட்சணங்களில் புருவ லட்சணமும் ஒன்று! இந்தப் புருவத்தில் கருகருவென்று அடர்த்தியான முடி நீண்டு கத்தி போல கூர்மையாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டம் மிக்கவர்களாக கருதப்படுகிறார்கள். இயற்கையிலேயே இவர்கள் தெய்வம்சம் பொருந்தியவர்கள் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. உள்ளதை உள்ளபடி கூறி விடுவார்கள். இவர்களுக்கு மனதில் எதையும் வைத்து பூட்டிக் கொள்ள தெரியாது. தப்பை தப்பு என்று அந்த இடத்திலேயே தட்டிக் கேட்கும் ஆளுமை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

புருவங்களில் ரோமங்கள் இல்லாதவர்கள், முடி ரொம்பவும் குறைவாக இருப்பவர்கள் ஆபத்தானவர்கள் என்றும் கூறுகிறது. இவர்கள் தரித்திரம் பிடித்தவர்கள் என்றும், இவர்களிடம் தயவு தாட்சண்யம் இருக்காது, பாவத்தை துணிந்து செய்பவர்களாக இவர்கள் இருப்பார்கள் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. ரோமம் குறைவாக உள்ளவர்கள் மந்த புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

இரு புருவங்களுக்கு மத்தியில் அதிக இடைவெளி கொண்டு இருந்தால் அவர்கள் மன வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள். எவ்வளவு துன்பத்தையும் அவர்களால் சகித்து தாங்கிக் கொண்டு அடுத்த படியை நோக்கி முன்னேறி சென்று கொண்டே இருக்க முடியும். இரு புருவங்களுக்கு மத்தியில் இடைவெளி குறைவாகவும் ஒன்றோடு ஒன்று இணைவது போல் இருந்தாலும், இணைந்து இருந்தாலும் அவர்கள் அன்பானவர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

புருவங்களில் இயற்கையான மடிப்புகள் ஒருவருக்கு காணப்பட்டால் அவர்கள் மரியாதை தெரியாதவர்களாக இருப்பார்கள். ஆணவமும், கர்வமும் இவர்களிடம் அதிகமாக இருக்கும். பொறாமை குணம் மேலோங்கி காணப்படும். ஒருவருடைய புருவம் குறுகி ஒடுக்கமாக இருந்தால், மெல்லியதாக இருந்தால் அவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாகவும், ஒழுக்கம் தவறாமலும் வாழ்வார்கள். எவருக்கும் தாராளமாக உதவும் குணம் இவர்களிடம் இருக்கும். இரக்க குணமும், கருணை உள்ளமும் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த வார ராசிபலன் 03/07/2023 முதல் 09/07/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

ஒருவருடைய புருவம் விசாலமாக விரிவடைந்து அதே சமயத்தில் குறுகி இருந்தால் ஏழைகளாக, வறியவர்களாக, வறுமையில் கஷ்டப்படுபவர்களாக இருப்பார்கள். மாடாய் பாடுபட்டு அவர்கள் உழைத்தாலும் உழைப்பிற்கு பலன் இருக்காது. புருவங்கள் கீழ் நோக்கி சரிந்து, அமுக்கப்பட்ட நிலையில் இருந்தால் இவர்கள் இல்லற வாழ்க்கைக்கு தகுதியற்றவர்களாக இருப்பார்கள். ஒருவருடைய புருவம் அரை சந்திரனைப் போல அல்லது வில் போன்று வளைந்து அழகிய தோற்றத்துடன் இருந்தால் அவர்கள் செல்வந்தர்களாக இருப்பார்கள். பரம்பரை பணக்காரர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். வளைந்த மெல்லிய புருவம் கொண்ட பெண்கள் அறிவாற்றலில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.

- Advertisement -