இந்த மூன்று பொருட்களையும் உங்கள் வீட்டில் ஒன்றாக வைத்துப் பாருங்கள். நம்பமுடியாத அதிசயம் நடக்கும்.

lakshmi-thinking

ஒரு வீடு என்றாலே அது கோவில் போல இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட வீட்டை கோவிலாக மாற்றக்கூடும் சக்தியானது பெண்களிடம் தான் உள்ளது. ஒரு பெண் வீட்டை சுத்தமாகவும், பொறுப்பாகவும் பார்த்துக் கொண்டாலே போதும் அந்த வீட்டில் மகாலட்சுமி நிச்சயம் நிரந்தரமாக வாசம் செய்வாள். இதோடு சேர்த்து நீங்கள் சின்ன சின்ன பரிகாரங்களையும் செய்து வந்தால் உங்களுக்கு இன்னும் பல வகைப்பட்ட அதிர்ஷ்டங்கள் தேடி வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதெல்லாம் சின்ன சின்ன பரிகாரங்கள் தான். இதை செய்தால் நல்லதைத் தவிர வேறு ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படும் அளவிற்கு இதில் எதுவும் கிடையாது.

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள்தான் இவை பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய். இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு நம் வீட்டின் சமையலறை, பணம் வைக்கும் இடம் இந்த இரண்டு இடத்தில் வைத்துவிட்டால் போதும். உங்களால் முடிந்தால் வீட்டில் குபேர மூலையில் ஒரு டப்பாவை வைப்பது மிகவும் சிறந்தது. பச்சைக் கற்பூரம் 1, ஏலக்காய் 2, சோம்பு சிறிதளவு இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சோம்பிலும், ஏலக்காயிலும் வண்டுகள் சேரும். பச்சைக் கற்பூரம் கரைந்து போகும் என்பதால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம். இந்த மூன்று பொருட்களும் நம் வீட்டில் தனித்தனியாக இருந்திருக்கலாம். ஆனால் சேர்ந்து விட்டால், இதற்கு இருக்கும் மகிமையே தனிதான். வீட்டில் மங்களகரம் நிறைந்து இருப்பதற்கு சுபிட்சமான நிலை ஏற்படுவதற்கும் இது ஒரு நல்ல பரிகாரம்.

இதோடு சேர்த்து இன்னும் இரண்டு டிப்ஸ்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு பணவரவை அதிகரிப்பதற்கான வழிமுறைகள். பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு, ஒரு சிறிய துண்டு லவங்கப்பட்டை குச்சியை அந்த நோட்டில் வைத்து நன்றாக சுருட்டிவிடுங்கள். நீங்கள் சுருட்டியது பிரியாமல் இருக்க பச்சை நிற நூலை வைத்து கட்டிக் கொள்ளவும். பத்து ரூபாய் உடன் சேர்ந்த அந்த லவங்கம் பட்டை கொண்ட முடிச்சை உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள். பணவரவு என்றும் நிரந்தரமாக இருக்கும்.

அடுத்ததாக உங்களது பர்ஸ்ஸில் புதினா இலையை வைத்துக்கொள்வது நல்லது. யாருக்காவது பணம் எடுத்துக் கொடுக்கும் முன், அந்த இலையை நீங்கள் பார்த்துவிட்டு ‘நான் செலவு செய்யும் பணம் வேறு ஒரு வழியில் எனக்கு திரும்பி வந்து விட வேண்டும்’ என்ற நினைப்போடு பணத்தை செலவு செய்தால் நிச்சயம் உங்களுக்கு ‘செலவு வரவு செலவு வரவு’ என்ற கணக்கு சீராகவே இருக்கும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படாது. வாடிய புதினாவை பர்ஸ்ஸில் வைத்துக் கொள்ளக் கூடாது. மாற்றிவிட வேண்டும்.

- Advertisement -

Mint leaf(puthina)

இந்த பரிகாரங்கள் எல்லாமே சின்ன சின்ன பரிகாரங்கள் தான். இதை செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். எவ்வளவுதான் பணவரவு இருந்தாலும் அதை சேமிக்கும் தந்திரத்தை நாம் கற்றுக் கொண்டால் தானே வாழ்வில் முன்னேற முடியும். இதெல்லாம் செய்தால் பணக்காரராகி விட முடியுமா? என்ற எண்ணத்தோடு எந்த பரிகாரத்தையும் தயவுசெய்து செய்யாதீர்கள். அதனால் உங்களுக்கு பலன் ஏற்படாது. இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நமக்கும் நல்லது நடக்கும் என்ற எண்ணத்தோடு செய்வதன் மூலமே நம்மால் பலனை முழுமையாக அடைய முடியும். ‘இதையெல்லாம் கூட நம்புகிறார்களா? இதையெல்லாம் யார் செய்வார்கள்? என்று கூட சிலர் சிந்திப்பார்கள். ஆனால் பரிகாரத்தை செய்பவர்கள் நல்ல பலன் பெற்றால், நிச்சயம் அதை வெளியில் கூற மாட்டார்கள். பரிகாரத்தை வெளியில் சொன்னால் அதிர்ஷ்டம் போய்விடும் என்று நினைப்பார்கள். இதனாலேயே பல பரிகாரங்கள் பலருக்கு தெரியாமல் போகின்றது.

இதையும் படிக்கலாமே
இந்த நீரை வீட்டில் தெளித்தால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi vasam seiyum porutkal. Mahalakshmi kadatcham Tamil. Selvam sera pariharam Tamil. Veetil selvam sera tips Tamil.