இந்த நீரை வீட்டில் தெளித்தால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?

இல்லங்களில் பூஜை, புனஸ்காரங்கள் செய்யும் போது ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வழக்கப்படி அல்லது தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை கையாண்டு வழிபடுவர். இதில் நம் வீடுகளில் பூஜை செய்யும் முன்னர் சுவாமி படங்களுக்கு, பூஜை சாமான்களுக்கு மஞ்சள், குங்குமம் வைப்பது அனைவரும் பின்பற்றும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதில் குறிப்பாக ஒன்றை பின்பற்றுவதை கவனித்திருக்கிறீர்களா? மீதமிருக்கும் மஞ்சளை நீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்து வருவோம். அது எதற்காக என்று தெரியுமா? புனித நீரை தெளிப்பதன் மூலம் என்ன அற்புதம் நிகழும் என்று இப்பதிவில் காண்போம்.

thulasi theertham

வீடுகளில், வியாபார ஸ்தலங்களில் இவ்வாறு மஞ்சள் கலந்த நீரை தெளிப்பதால் துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் வராது. அப்படியே இருந்தாலும் வெளியேறிவிடும். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. மூளை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் கொடிய கிருமிகளும் அழிந்து விடும். மஹாலக்ஷ்மி மஞ்சலினால் ஈர்க்கபடுகிறாள். துர்தேவதைகள் விலகி நல்ல தேவதைகள் வீட்டிற்குள் வரும். சம்பாதிக்கும் செல்வங்கள் நிலைக்கும். அதனால் தான் ஆங்காங்கே மஞ்சள் கலந்த மங்கள நீர் தெளிக்கிறார்கள்.

பூஜை செய்யும் போது தீர்த்தம் வைக்க கலசம் அல்லது பஞ்ச பாத்திரம் வைத்திருப்போம். அதில் பெரும்பாலும் துளசி போட்டு வைத்திருப்போம். கலசத்தில் துளசியுடன் மஞ்சள், பச்சை கற்பூரம், பன்னீர் இவைகளை கலந்து வையுங்கள். அந்த நீரை வீடு முழுவதும் தெளித்து வருவதால் சகல வளங்களும் பெருகும். மஞ்சளுடன் இவைகள் ஒன்று கலந்து எத்தகைய தீய சக்திகளையும் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து விடும் என்று கூறப்படுகிறது.

thulasi-theertham

சம்பாதித்த பணம் வீட்டில் தங்க வேண்டும் என்றால் மகாலக்ஷ்மி குடியிருக்க வேண்டும். துர் தேவதைகள் இருக்க கூடாது. இல்லையெனில் வீண் விரயங்கள் ஏற்படும். ஒரு விஷயத்தில் லாபம் ஏற்படும் என்று நம்பி முதலீடு செய்வோம். ஆனால் நஷ்டம் தான் உண்டாகும். சுபகாரிய தடை நிகழும். எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது ஆனால் சுபகாரியங்கள் தடங்கள் ஆகி கொண்டே இருக்கும். வரன் அமையாமல் இருக்கும். அமைந்த இடம் கைவிட்டு போகும். இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் வீட்டில் நல்ல சக்திகளுக்கு பதிலாக துஷ்ட சக்திகள் இருப்பதே ஆகும்.

- Advertisement -

பச்சை கற்பூரம் அளப்பரிய சக்தி வாய்ந்தது. விஷ்ணு தீர்த்ததில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பச்சை கற்பூரம் தான். பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருப்பதாக நம்பபடுகிறது. இதற்கு தக்க சான்றாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. அங்கு பச்சை கற்பூரம் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் தான் பண மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அவற்றை சாதாரணமாக பூஜை அறையில் வைத்தாலே நன்மைகள் பல வந்து சேரும். தெய்வீக மனம் கொண்ட ஒரு பொருள் பச்சை கற்பூரம். அவற்றை தீர்த்ததில் கலப்பதால் இல்லம் ஸ்பீக்ஷம் அடையும்.

pachai karpooram

தோஷ நிவர்த்தி மட்டும் செய்தால் போதாது. வாழும் வீட்டில் தீய சக்திகளை விரட்டி அடிப்பதும் பரிகாரம் தான். வீட்டை எப்போதும் நல்ல வாசத்துடன் வைத்து கொள்ளுங்கள். தினமும் பூஜை செய்ய முடியாது. ஒரு வீட்டில் இருக்கும் அனைவரும் வேலைக்கு போய் சம்பாரித்தால் தான் குடும்பத்தை வழிநடத்த முடியும் என்ற கட்டாய சூழலில் வசித்து கொண்டிருக்கிறோம். வாரம் ஒரு முறையேனும் பிரார்த்தனைக்காக நேரம் ஒதுக்கி வைக்கலாம். இதனால் மனமும் நிம்மதி அடையும். குடும்பமும் தழைக்கும். தெளிப்பதற்கு மட்டுமல்ல. அதை அருந்தவும் செய்யலாம். இதன் மூலம் தீராப் பிணி தீரும்.

இதையும் படிக்கலாமே
மகாலட்சுமியின் அம்சம் மருதாணிக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kalasa theertham benefits in Tamil. Punitha theertham in Tamil. Punitha theertham nanmaigal in Tamil. Punitha theertham payangal in Tamil.