இந்த ஆண்டு முழுக்க அதிஷ்டத்தை பெற இன்று கூற வேண்டிய மந்திரம்

vinayagar-5

புத்தாண்டு பிறந்ததை ஒட்டி அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்பதுண்டு. பலர் காலையிலே கோயிலிற்கு சென்று இறைவனின் ஆசியை பெறுவதுண்டு. இந்த ஆண்டின் தொடக்க நாளான இன்று இருக்கும் மகிழ்ச்சியானது இந்த ஆண்டு முழுக்க உங்களிடத்தில் நிலைத்திருக்க உதவும் ஒரு அற்புத மந்திரம் இதோ உங்களுக்காக.

bairavar

ஆதித்ய பைரவ மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய |
சௌபாக்கியம் ப்ரசீத ப்ரசீத |
ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் |

இந்த மந்திரத்தை முதன் முதலில் புத்தாண்டு அன்றோ அல்லது பிறந்த நாள் அன்றோ ஜபிக்க துவங்குவது சிறந்தது. இன்று இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்குவோர் இந்த வருடம் முழுக்கு இதை ஜபித்து வர வேண்டும். இதனால் உங்கள் வாழ்வில் விரைவான முன்னேற்றம், எதிர்பாராத பண வரவு, கிரக தோஷங்களில் இருந்து விடுபடுதல் போன்ற அற்புத பலன்களை பெற்று இன்புற்று வாழலாம்.

இதையும் படிக்கலாமே:
கலைகள் அனைத்திலும் மன்னனாக விளங்க உதவும் சரஸ்வதி காயத்ரி மந்திரம்

பிறந்த நாள் அன்று இந்த மந்திரத்தை ஜபிக்க துவங்குவோர், பிறந்த நேரத்தை அறிந்து அந்த நேரத்தில் ஜபிக்க துவங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு நீங்கள் பிறந்த தேதி 6/6/2006 காலை 9 மணி எனில் இந்த மந்திரத்தை உங்கள் பிறந்தநாள் அன்று காலை 9 மணிக்கு ஜபிக்க துவங்குவது சிறந்த பலனை தரும்.