கலைகள் அனைத்திலும் மன்னனாக விளங்க உதவும் சரஸ்வதி காயத்ரி மந்திரம்

saraswathi-manthiram
- Advertisement -

கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியே அனைத்து கலைகளுக்கும் தெய்வமாக விளங்குகிறாள். வெள்ளை ஆடையோடு வெந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ அவரால் அனைத்து கலைகளையும் எளிதில் கற்க முடியும். சரஸ்வதி தேவியை போற்றும் வகையில் “சகலகலாவல்லி மாலை” என்னும் நூலை குமரகுருபரர் இயற்றியுள்ளார்கள். இப்படி பல சிறப்புக்கள் மிக்க சரஸ்வதி தேவியை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை கூறுவதன் பயனாக அவரின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

saraswathi

சரஸ்வதி காயத்ரி மந்திரம்:

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

- Advertisement -

பொது பொருள்:
மனிதர்களுக்கு பேசும் திறன் கொடுத்த தேவியே, பிரம்ம தேவனின் பத்தினியே, நான் அனைத்திலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே.

saraswathi 2

மேலே உள்ள மந்திரத்தை தினமும் ஜெபிப்பதன் பலனாக ஒருவருக்குள் ஒளிந்திருக்கும் கலை திறன் முழுமையாக வெளிப்படும். கலைத்துறையில் இருப்பவர்கள் ஜொலிக்க ஆரமிப்பர். பள்ளி செல்லும் குழைந்தைகள் இந்த மந்திரத்தை ஜெபித்தால் அவர்களின் அறிவாற்றல் மேம்படும்.

- Advertisement -

Goddess Saraswathi

சரஸ்வதி வழிபாடு

மனிதனின் சிந்தனை அறிவு தான் பிற உயிர்களிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் ஒரு தனித்துவம் வாய்ந்த ஆற்றலாக இருக்கிறது. அந்த சிந்தனைத் திறன் கூர்மையாகவும், பலருக்கும் பயன்படும் உதவுவது சிறந்த கல்வியாகும். ஒருவருக்கு சிறந்த கல்வியறிவு, கலைஞானம் ஏற்படுவதற்கு கல்விக் கடவுளான ஸ்ரீ சரஸ்வதி தேவியின் கடாட்சம் தேவைப்படுகிறது. செல்வ மகளான லட்சுமி தேவியின் அருள் அனைவருக்குமே கிடைத்து விடும். ஆனால் கல்வி அறிவு கடவுளான சரஸ்வதி தேவியின் அருட்கடாட்சம் அவள் விரும்பும் நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு பாக்கியமாக இருக்கிறது. தினமும் சரஸ்வதி தேவிக்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபடுபவர்களுக்கு சிறந்த கல்வியையும், அக்கல்வியறிவால் வாழ்வில் பல நன்மைகளும் உண்டாக அருள்புரியும் தெய்வமாக ஸ்ரீசரஸ்வதி தேவி இருக்கிறார்.

- Advertisement -

Goddess Saraswathi

சரஸ்வதி வழிபாட்டிற்குரிய தினங்கள்

சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு எல்லா தினங்களும் சிறந்தது தான் என்றாலும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் தேவிக்கு வெள்ளை தாமரை மலர் சமர்ப்பித்து, அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவு நைவேத்தியம் வைத்து சரஸ்வதி காயத்ரி மந்திரங்களை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால், வாழ்வில் சிறப்பான பலன்களை பெறமுடியும். புரட்டாசி – ஐப்பசி மாதங்களில் வருகின்ற நவராத்திரி விழாவின் இறுதியாக வரும் சரஸ்வதி பூஜை தினத்தன்று வீட்டில் சரஸ்வதி படத்திற்கு மாலைகள் சாற்றி, அவல் பொரி பழங்கள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, சரஸ்வதி தேவிக்குரிய காயத்ரி மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபடுவதால் கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி உண்டாகும்.

saraswathi 1

சரஸ்வதி வழிபாடு பலன்கள்

கல்விக்குரிய கடவுளாக சரஸ்வதி தேவி கருதப்பட்டாலும் சரஸ்வதி தேவியின் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுபவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் ஏற்படும். சிறந்த வாக்கு வன்மை உண்டாகும். சிலருக்கு வாக்கு பலிதம் ஏற்படும். அற்புதமான பேச்சாற்றல் உருவாகும். சிறந்த கல்வி ஞானம் கிடைக்க பெறுவார்கள். அனைத்து வகையான கலைகளிலும் தேர்ச்சி மற்றும் நிபுணத்துவம் உண்டாகும். புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல் மேம்படும். வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English Overview:
Here we have Saraswathi Gayatri mantra in Tamil. It is also called as Gayatri mantra in Tamil.

- Advertisement -