- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுத்தாண்டில் செய்யக்கூடாதவை

புத்தாண்டில் செய்யக்கூடாதவை

- Advertisement -

2025 ஆம் ஆண்டு புத்தாண்டு துவங்கிய நிலையில் இந்த விஷயங்களை எல்லாம் வீட்டில் சிலர் அவசர அவசரமாக செய்வது உண்டு. பொதுவாகவே ஒரு ஆண்டு துவங்கும் பொழுது, இந்த விஷயங்களை எல்லாம் செய்தால் மனதிற்கு திருப்தி ஏற்படும் என்பது தவறான நம்பிக்கை. புத்தாண்டு துவங்கும் பொழுது எந்தெந்த விஷயங்களை செய்யக் கூடாது? என்னும் சுவாரஸ்யமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களைத் தான் இந்த பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

புத்தாண்டு துவங்கும் பொழுது வீட்டை சுத்தம் செய்யக் கூடாது. புத்தாண்டு துவங்குவதற்கு முன்பு தான் வீட்டை எல்லாம் சுத்தம் செய்து வைக்க வேண்டும். சிலர் இந்த நல்ல நாளில் தூசு தட்டுவது, வீட்டை துடைப்பது என்று சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். புத்தாண்டில் பழைய பொருட்களை எல்லாம் வீட்டில் இருந்து வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்னும் பழமொழியை போகி பண்டிகைக்கு சொல்லுவார்கள். எனவே புத்தாண்டு தினத்தில் வீட்டை சுத்தம் செய்வது என்பது கூடாது. நீங்கள் அப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முந்தைய நாளில் செய்திருக்க வேண்டும். அவசியமோ, அவசியமற்ற பொருட்களோ அன்றைய நாளில் குப்பையில் எறிய கூடாது.

- Advertisement -

புத்தாண்டு நாளில் தங்க நகைகளை யாருக்கும் தானம் கொடுக்க கூடாது. அன்றைய தினம் அரிசி, பருப்பு, குடை, கம்பளி, பணம், உணவு போன்றவற்றை தானம் கொடுப்பது நல்ல பலன்களை கொடுக்கும். ஆனால் தங்க நகைகளையும், வீட்டில் இருக்கும் மற்ற பொருட்களையும் யாருக்கும் இனாமாகவோ, தானமாகவோ கொடுக்க கூடாது. இது செல்வ வளத்தை குறைக்கும்.

புத்தாண்டு நாளில் புதிய கணக்கை துவங்குவது ரொம்பவும் நல்ல ஒரு விஷயமாகும். பழைய கணக்குகளை முடித்து புதிய கணக்கை வரவு வைக்க வேண்டும். அப்படி வரவு வைக்கும் பொழுது முதல் கணக்கை செலவாக வைக்கக் கூடாது. வரவு கணக்கு செலவில், வரவு தான் அதிகமாக அன்றைய தினம் இருக்க வேண்டும். அன்றைய நாள் வீட்டில் பால் பொங்க விடக் கூடாது. பூஜை அறையில் குங்குமம் அல்லது அரிசி, எண்ணெய், உப்பு போன்றவற்றை சிந்தக் கூடாது.

- Advertisement -

புத்தாண்டில் பல விதங்களில், பல விதமான புதிய முயற்சிகளுக்கு அடிக்கோடிட்டு வைப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல எல்லா விஷயத்தையும், அளவோடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு உடல் எடையை குறைக்க போகிறேன் என்று கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. கந்தலான ஆடைகளை உடுத்தக் கூடாது.

இதையும் படிக்கலாமே:
3-1-2025 வெள்ளிக்கிழமை சதுர்த்தி வழிபாடு

புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு செல்ல வேண்டும். வீட்டில் விளக்கேற்றி வழிபாடுகள் செய்ய வேண்டும். ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தான, தர்மங்களும், பரிகாரங்களும் செய்ய தவறக் கூடாது. குலதெய்வம் மற்றும் பித்ருக்களுடைய ஆசீர்வாதத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அன்றைய நாளில் நண்பர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும். யாருடனும் பகைமையை வளர்க்கக் கூடாது. யாரையும் அசுப வார்த்தைகளை பயன்படுத்தி திட்டக்கூடாது. பகை, உறவுகளை அழிக்கும். பகை, நம் மனநலத்தையும், உடல் நலத்தையும் பாதிக்கும். எனவே பகைமையை தவிர்த்து நட்புறவை பேண வேண்டும். அனைவரிடமும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் இந்த நாளை கொண்டு சென்றால், மென்மேலும் வெற்றிகள் உங்களுக்கு குவியும்.

சற்று முன்