2025 புது வருடம் பிறந்து விட்டது. நாளை ஜனவரி மாதம் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மார்கழி மாதத்தில் சதுர்த்தி திதியானது வரவிருக்கிறது. அமாவாசை முடிந்து நான்காவது நாள் வளர்பிறை சதுர்த்தி திதி வரும். இந்த நாளில் விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு கோடான கோடி செல்வ வளம் பெருகும். கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வளர்பிறை போல உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை நன்மைகளும் வளர்ந்து செல்ல, நாளைய தினம் விநாயகர் வழிபாட்டை எளிமையான முறையில் எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
வளர்பிறை சதுர்த்தி விநாயகர் வழிபாடு
மார்கழி மாதம் என்றாலே அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதில் வெள்ளிக்கிழமையும், கூடவே சதுர்த்தி திதியும் சேர்ந்து வந்திருக்கிறது என்றால் இந்த நாளை நாம் தவற விடுவோமா. நிச்சயம் தவறவிடக்கூடாது. உங்களால் விநாயகரை நினைத்து சாப்பிடாமல் விரதம் இருக்க முடியும் என்றால், நாளைய தினம் முழுவதும் சாப்பிடாமல் இருந்து, மாலை 6 மணிக்கு பூஜை செய்து, பிறகு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை உள்ளவர்கள் வயிறார சாப்பிட்டே விநாயகரை வழிபாடு செய்யுங்கள். எந்த பிரச்சனையும் இல்லை.
நாளை மாலை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் கொஞ்சம் அவலில் நாட்டு சர்க்கரை போட்டு, கலந்து விநாயகர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக கொடுத்தால், மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்கள் கிடைக்கும். சரி இது எல்லோருக்கும் தெரிந்த வழிபாடு தானே.
பணப் பிரச்சனையிலிருந்து நான் வெளிவர வேண்டும். நாளைய தினம் மகாலட்சுமியின் அனுக்கிரகமும் எனக்கு கிடைக்க வேண்டும். நான் என்ன வழிபாடு செய்வது. கவலைப்படாதீங்க, உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் வழிபாடு இருக்கிறது. ஏலக்காய் மாலை.
சதுர்த்தி வழிபாடு என்றாலே, அது மாலை நேர வழிபாட்டிற்கு தானே சிறப்பு. மாலையில் தான் இந்த சிறப்பு வழிபாட்டை மேற்கொள்ள. ஆனால், வெள்ளிக்கிழமை, நாளை காலை எழுந்து குளித்துவிட்டு வீட்டில் வழக்கம் போல பூஜையறையில் மகாலட்சுமி பூஜையை முடித்து விடுங்கள். உங்கள் உள்ளங்கைகளில் ஒரு 11 ஏலக்காயோ அல்லது 21 ஏலக்காய்களோ உங்கள் சவுகரியத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். 108 ஏலக்காய் கூட இருக்கலாம் அது உங்கள் விருப்பம்.
சுத்தமான பாத்திரத்தில் குடிக்கின்ற நல்ல தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, இந்த ஏலக்காயை போட்டு ஊற வைத்து விடுங்கள். மாலை நேரத்தில், கோவிலுக்கு செல்வதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு மஞ்சள் நிற நூலில் இந்த ஊற வைத்த ஏழைக்காய்களை கோர்த்துக் கொள்ளுங்கள்.
இதை மாலையாக கட்டி இதை கொண்டு போய் விநாயகருக்கு போட்டு பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் உங்களுடைய செல்வ வளம் மேலும் மேலும் உயரும். உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த விநாயகர் இருக்கிறாரோ அந்த விநாயகருக்கு இந்த ஏலக்காய் மாலையை செலுத்தலாம். மகாலட்சுமியின் அனுகிரகமும் விநாயகரின் அனுகிரகமும் ஒரு சேர கிடைக்கும்.
நம்பிக்கை இல்லாமல் வழிபாட்டை செய்யக்கூடாது. முழு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் பண கஷ்டம் தீரும். வருமானம் பெருகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மாலையை போட்டுவிட்டு விநாயகருக்கு பிள்ளையார் தோப்புக் காரணம் போட வேண்டும். பிள்ளையார் கொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தரும் குபேர செடி
விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். விநாயகர் கோவிலில் நமஸ்காரம் செய்ய வேண்டும். மேல் சொன்ன விஷயங்களை நம்பி செய்பவர்களுக்கு நம்பிக்கை நாயகன், தும்பிக்கை நாயகனின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.