நாளை தமிழ் புத்தாண்டு! மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் வரவேற்க, நினைத்தது நல்லபடியாக நடக்க, இந்த 3 பொருட்களை வாங்கி, வீட்டில் இப்படி வைக்க மறக்காதீங்க!

mahalashmi3

நாளை வரக்கூடிய தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்பது என்பது கட்டாயம் நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். புத்தாண்டை வரவேற்பதற்கு முந்தைய நாளே அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்திருப்போம். ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று நாம் செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளது. ஆன்மீக ரீதியாக நீங்கள் இந்த விஷயங்களை மேற்கொண்டால் நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் தரிதிரம் வெளியே விரட்டி அடிக்கப்படும். வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் நுழையும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். அதற்கு நாம் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன. அதை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

tamil-new-year

முதலில் நாளைய தினம் தமிழ்புத்தாண்டு அன்று நம் வீட்டிற்கு வாங்கி வர வேண்டிய அந்த 3 முக்கியமான பொருட்கள் என்னென்ன. கல் உப்பு, மல்லிகைப் பூ, விரலி மஞ்சள். தமிழ் புத்தாண்டு அன்று காலை நேரத்தில் பூஜை அறையில் வைப்பதற்கு முந்தைய நாளே நீங்கள் கல் உப்பை வாங்கி வீட்டில் வைத்து இருந்தாலும் சரி, தமிழ் புத்தாண்டு அன்று காலையில் சென்று கட்டாயமாக கல் உப்புடன் சேர்த்து மல்லிகை பூவையும் விரலி மஞ்சளை வாங்கி வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.

நிறையப்பேர் பூஜைக்கு தேவையான புஷ்பங்களை முந்தைய நாளே வாங்கி வைத்து விடுகிறார்கள். அது தவறு கிடையாது. இருப்பினும் அந்த நல்ல நாளில் பணம் கொடுத்து பூவை, நம் கையால் வாங்குவது பல நல்ல பலன்களை நமக்கு கொடுக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் சுமங்கலிப்பெண்கள் வாசனை நிறைந்த பூக்களை அன்றைய தினம் தலையில் சூடிக் கொள்ள வேண்டும்.

flower-poo-rose

பண்டிகை தினங்களில் பூக்களுக்கு விலை அதிகமாக உள்ளது என்று முந்தைய நாளே இப்போதெல்லாம் நாம் பூக்களை வாங்கி நம் வீட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்கின்றோம். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து, கொஞ்சம் பூக்களையாவது அந்த நல்ல நாளில் வாங்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

- Advertisement -

சரி பூவை வாங்கி சுவாமி படத்துக்கு வைத்துவிட்டு அதன் பின்பு வீட்டில் இருக்கும் குழந்தைகள் சுமங்கலிப் பெண்கள் தங்களுடைய தலையில் பூவைச் சூடிக் கொள்ள வேண்டும். இந்த கல்லுப்பு என்ன செய்வது. அன்றைய தினம் உங்களுடைய சமையலுக்கு புதியதாக வாங்கிய கல் உப்பை சேர்த்து சமைத்துக் கொள்ளலாம். அடுத்தபடியாக வாங்கிய விரலி மஞ்சளை என்ன செய்வது.

uppu

புத்தாண்டு அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு 6 மணி அளவில் உங்களுடைய வீட்டு வழக்கப்படி, உங்கள் பூஜையை எல்லாம் நிறைவு செய்துவிட்டு குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு மகாலட்சுமியை வேண்டிக்கொண்டு இரண்டு விரலி மஞ்சளை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் நிறத் துணியில் இந்த இரண்டு விரலி மஞ்சளையும் வைத்து முடிச்சு போடவேண்டும்.

virali-manjal

நூலை வைத்து எல்லாம் கட்ட வேண்டாம். விரளி மஞ்சளை துணியில் வைத்து சுருட்டி அந்தத் துணியில் ஒரு முடி போட்டால் போதும். முந்தானையில் காசை சுருட்டி முடிப்போம் அல்லவா. அதைப் போல்தான். இந்த முடிச்சை முடியும் போது நிறைவேறாத உங்களுடைய ஒரு வேண்டுதலை வைக்க வேண்டும். காலையில் இதை செய்ய முடியவில்லை என்றாலும் மாலை 6 மணி அளவிலும் இந்த முடிச்சினை முடிந்து வைக்கலாம் தவறொன்றும் கிடையாது.

praying-god1

அதன் பின்பு இந்த முடிச்சினை உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் பத்திரமாக வைத்துவிடுங்கள். நிச்சயம் அடுத்த வருடம் வரக்கூடிய, வருடப் பிறப்பிற்குல் நீங்கள் இந்த மஞ்சளை எதற்காக முடிந்து வைத்தீர்களோ அந்த வேண்டுதல் நிறைவேறும். உங்கள் வீட்டில் மங்கள காரியம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம். நல்ல வேலை கிடைக்க வேண்டும்.

praying-god

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். இப்படி எந்த வேண்டுதலை வைத்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது ஒரு நம்பிக்கை. முடிந்து வைத்த அந்த விரலிமஞ்சள் முடிச்சினை வேண்டுதல் நிறைவேறியதும் ஏதாவது ஒரு கோவில் மரத்தடியில் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.