அடிக்கிற வெயிலில் தலைமுடி வியர்த்து வியர்த்து முடி உதிர்வு அதிகமாக இருக்கிறதா? வெயில் காலத்தில் முடி உதிர்வை உடனடியாக கட்டுப்படுத்தும் புத்தம் புதிய புதினா ஹேர் பேக் இதோ.

puthina-hair-pack
- Advertisement -

தினமும் தலைக்கு குளிக்க வில்லை என்றாலும் அடிக்கிற வெயிலுக்கு நம்முடைய ஸ்கால்ப்பில் வியர்வை வேர்த்து வழிகின்றது. இதன் மூலம் தலையில் அரிப்பு பிரச்சனை. முடி உதிர்வு பிரச்சனை இன்ஃபெக்ஷன் போன்ற பல பிரச்சனைகளின் மூலம் முடி உதிர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய தலை முடியை வியர்வையில் இருந்து ஏற்படும் பிரச்சனையில் இருந்து பாதுகாக்க, முடியை உதிர விடாமல் அடர்த்தியாக வளர ஒரு சூப்பரான செலவு குறைவான ஹார்பர் உங்களுக்காக இதோ.

இந்த ஹேர் பேக்கில் நாம் பயன்படுத்தப் போகும் இலை புதினா இலை. புதினா இலை வெயில் காலத்தில் நம் தலையில் ஏற்படக்கூடிய பிரச்சனையை தடுக்கக்கூடியது. ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை எடுத்து தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளுங்கள். 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை முந்தைய நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிக்ஸி ஜாரை எடுத்து ஒரு கைப்பிடி அளவு புதினா, ஊற வைத்த வெந்தயம் அந்த தண்ணீரோடு சேர்த்து, ஊற்றி விழுது போல நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி, இதோடு முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி, விளக்கெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி அடித்து நன்றாக கலந்தால் நமக்கு தேவையான ஹேர் பேக் தயார்.

இந்த ஹேர் பேக்கை, வெயில் காலத்தில் வாரத்திற்கு ஒருநாள் பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்துங்கள். மூன்று மாதங்கள் வரை இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வாருங்கள். உங்களுடைய தலையில் வியர்வை அழுக்கால் ஏற்படக்கூடிய அரிப்பு பிரச்சனை பேன் தொல்லை இவைகளுக்கு சீக்கிரத்தில் நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

இந்த பேக்கை முதலில் ஸ்கால்ப்பில் நன்றாக படும்படி போட்டுக்கொள்ள வேண்டும். மீதமிருக்கும் பேக்கை முடியின் நுனி வரை அப்ளை செய்துவிட்டு அப்படியே 20 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள். பின்பு வழக்கம் போல ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசிக் கொள்ளுங்கள். ஹேர் தலையில் போடுவதற்கு முன்பு. உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இன்று காலை ஹேர் பேக் போட வேண்டுமென்றால், முந்தைய நாள் இரவே தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் வைப்பது மிகவும் நல்லது. அப்போது ஹேர் பேக்கை தலையில் போடும் போது முடி உதிராமல் இருக்கும்.

நிறையபேருக்கு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து தலையில் போட்டால் சைனஸ் பிரச்சனை வரும் என்பது குறிப்பிடத்தக்கது. வெந்தயத்தை தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து வேகவைத்து அரைத்து தலையில் போட்டால் உடல் அவ்வளவாக குளிர்ச்சி ஆகாது. அதாவது ஊற வைத்த வெந்தயத்தை காட்டிலும் வேகவைத்த வெந்தயத்தில் குளிர்ச்சி தன்மை குறைவாக இருக்கும். உங்களுடைய உடல் நிலையைப் பொறுத்து வெந்தயத்தை ஊற வைத்தோ அல்லது வேக வைத்தோ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -