- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஎட்டு வாரங்களில், குட்டி குட்டியா புத்தம் புது முடிகள் வளர்ந்து, எட்டி பார்ப்பதை பார்த்து சந்தோஷப்பட...

எட்டு வாரங்களில், குட்டி குட்டியா புத்தம் புது முடிகள் வளர்ந்து, எட்டி பார்ப்பதை பார்த்து சந்தோஷப்பட வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

- Advertisement -

நிறைய பேருக்கு முடி அழகாக அடர்த்தியாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் எந்தெந்த பொருட்களை எப்படி பயன்படுத்தினால் மிகக் குறைந்த நாட்களில் புதிய முடிகளை வளர்க்க முடியும் என்பது தெரியவில்லை. மிக மிக எளிமையான முறையில் செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலை, ஆளி விதை, இந்த மூன்று பொருட்களை வைத்து, எட்டில் இருந்து பத்து வாரத்திற்குள் புதிய முடிகளை வளர்ப்பது எப்படி என்பதை பற்றிய அழகு குறிப்பு தான் இது. மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த மூன்று பொருட்களின் சத்துக்கள் ஒரு துளி அளவு கூட குறையாமல் பயன்படுத்த போகின்றோம். அது எப்படி. பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

எட்டு வாரங்களில் முடி வளர்ச்சி பெற அழகு குறிப்பு:
இந்த அழகு குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் செம்பருத்தி பூ 5, செம்பருத்தி பூ இலை 10, ஆளி விதை 2 ஸ்பூன். இதை ஆங்கிலத்தில் ஃபிளாக் சீட் என்று சொல்லுவார்கள். முதலில் செம்பருத்திப் பூவையும், செம்பருத்தி பூ இலையையும், நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பாத்திரத்தில் செம்பருத்திப் பூவை கையாலேயே கிழித்து போட்டுக் கொள்ளுங்கள். செம்பருத்தி பூ இலைகளையும் கிழித்து போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி அதில் ஆளி விதை 2 ஸ்பூன் போட்டு தட்டு போட்டு மூடி ஆறி லிருந்து ஏழு நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய பிறகு உங்கள் கைகளைக் கொண்டு இதை நன்றாக பிசைந்து கொடுக்கவும். தண்ணீர் ஜெல் பதத்தில் மாறி இருக்கும்.

புளி கரைப்பது போல இந்த கலவையை கையை கொண்டு நன்றாக கரைத்தால் சூப்பரான ஜெல் கிடைத்திருக்கும் அல்லவா. அதை ஒரு மெல்லிசான காட்டன் துணியில் ஊற்றி, வடிகட்டி எடுத்து விடுங்கள். சூப்பரான ஜெல் நமக்கு தயார். இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் 5 நாட்கள் கெட்டுப் போகாது. தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த ஜெல்லை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம். உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருந்தால் பதினைந்து நிமிடம் மட்டுமே இந்த ஜெல்லை தலையில் வைத்துக்கொள்ள வேண்டும். (பிறகு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.)

- Advertisement -

தேவைப்பட்டால் இந்த ஜெல்லை டபுள் பாய்லிங் மெத்தடின் சூடு செய்து தலையில் தேய்த்தால் சைனஸ் பிரச்சனை தவிர்க்கப்படும். ஒரு சின்ன பாத்திரத்தில் சுடுதண்ணியை வைத்து சூடு செய்யுங்கள். பிறகு அதன் மேலே ஒரு கிண்ணத்தில் இந்த ஜெல்லை ஊற்றி, சூடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தான் டபுள் பாய்லிங் மெத்தட் என்று சொல்லுவோம். இந்த எளிமையான அழகு குறிப்பு வாரத்தில் இரண்டு நாட்கள், எட்டு வாரம் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த ஐஸ் கட்டியை உங்க முகத்தில் தடவி பாருங்க. உங்க முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் ஏதும் இல்லாம ரொம்ப கிளீனா இருக்கும்.

உங்களுக்கே தலைமுடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும். முடி இல்லாத இடத்தில் நிறைய சின்ன சின்ன பேபி ஹேர் வளர்ந்திருப்பதை கண்ணாடி முன்பு பார்க்கலாம். அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்