10 ரூபாய் நோட்டை இப்படி மடித்து, இந்த இடத்தில் வைத்து விடுங்கள்! பின்பு போதும் போதும் என்று சொன்னாலும் பண மழையை உங்களால் நிறுத்தவே முடியாது.

cash

நமக்கு வாழ்க்கையில் எப்போதுமே இருக்கக்கூடிய பிரச்சனை என்றால், அது பணப்பிரச்சனை. எத்தனை ரூபாய், எவ்வளவு ரூபாய் நமக்கு வருமானம் வந்தாலும், அதற்கு ஏற்றவாறு செலவுகளும் பெருகிக் கொண்டேதான் போகும். நம் வீட்டு கூரையை பிச்சுக்கொண்டு பணம் மழை பெய்தாலும், போதும் போதும் என்று நாம் நிச்சயம் சொல்ல மாட்டோம் அல்லவா? இருப்பினும் நம் தேவைக்கு ஏற்ப பணத்தை மிச்சப்படுத்தி, எப்படித்தான் எடுத்து வைப்பது? வறுமையிலிருந்து நம்மை எப்படி காத்துக் கொள்வது, என்பதற்கான எளிமையான ஒரு தாந்திரீக முறையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pyramid

பொதுவாகவே பணத்தை ஈர்ப்பதற்கு என்று ஆன்மீக ரீதியாக, தாந்திரீகம் ரீதியாக இருக்கும் பல பொருட்களைப் பற்றி நமக்கு ஓரளவிற்கு தெரியும். அந்த வரிசையில் உங்களுடைய மணி பஸ்ஸில் ‘ஓம்’ என்று எழுதி வைத்துக் கொள்ளலாம், ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து வைத்துக் கொள்ளலாம். கண்ணாடி வைத்துக் கொள்ளலாம். வீட்டில் மீன் சின்னம், குதிரை படம் இப்படியாக நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் பல பொருட்கள் நமக்குத் தெரிந்திருக்கும்.

இப்படிப்பட்ட நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய, நாம் எல்லோரும் அறிந்த, சிலபேர் அறியாத ஒரு பொருளைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அது என்ன பொருள் என்றால் ‘பிரமிடு’. வாஸ்துப்படி இந்தப் பிரமிடை நம்முடைய வீட்டில் வைத்துக் கொண்டால், அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

pyramid2

குறிப்பாக, உங்களுடைய வீட்டில் வடக்கு திசையில் ஒரு நாற்காலியின் மேல், மர நாற்காலியின் மேல் ஏதோ ஒரு உலோகத்தால் செய்த பிரமிடை வைப்பது வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். அந்தப் பிரமிடுக்குள் அடிப்பக்கத்தில் 10 ரூபாய் நோட்டை மடித்து வைத்து விடுங்கள். அந்த நோட்டில் உள்ள சிங்கத்தின் தலை பிரமிடை தொட்டவாறு, அந்த நோட்டை பிரமிடு க்கு அடியில் வைக்க வேண்டும். புரிந்ததா? பிரமிடு கீழே 10 ரூபாய் நோட்டு, பத்து ரூபாய் நோட்டில் இருக்கும் சிங்கமுகம் அந்த பிரமிடை உரசியவாறு இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

- Advertisement -

இப்படி வைக்கும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் நிச்சயம் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். அடுத்தபடியாக ஒரு சிறிய வெள்ளைக் காகிதத்தில் பச்சை நிற குங்குமத்தை தொட்டு, பிரமிடை வரைந்து கொள்ளலாம். (பச்சை நிற குங்குமத்தை தண்ணீரில் போட்டு குழைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்) அந்த பேப்பரில் ஒரு பத்து ரூபாய் நோட்டை வைத்து, மடித்து உங்களுடைய பர்சில் வைத்துக் கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து இந்தப் பிரமிடை நீங்கள் வரைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

pyramid1

வீட்டில் இருக்கும் பிரமிடுக்கு அடியிலும் நிச்சயம் பத்து ரூபாய் நோட்டை தான் வைக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. உங்கள் மணிபர்சில் பேப்பரில் மடித்து வைக்கும் பிரமிடிலும் பத்து ரூபாய் நோட்டை மட்டும் தான் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. அவரவர் வசதிக்கேற்ப 100 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு, 2000 ரூபாய் நோட்டு வரை வைத்துக் கொள்ளலாம். அது அவருடைய சவுகரியத்தைப் பொறுத்ததுதான். நேர்மறை ஆற்றலை ஈர்த்து பணப்புழக்கத்தை அதிகரிக்க இதுவும் வழி என்பதற்காக சொல்லப்பட்டுள்ள பதிவு இது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பணவரவிற்கு இந்த டிப்ஸையும் யூஸ் பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
கடுமையான கடனும் கண்ணிமைக்கும் நேரத்தில் கரைந்துபோகும். பைரவருக்கு இந்த ஒரு பொருளை கொண்டு, இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.