பழைய துணிகளை ஒருபோதும் இப்படி செய்யவே கூடாது. பல தலைமுறைகளுக்கு கஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்து விடும்.

cloth
- Advertisement -

சாஸ்திரம் சம்பிரதாயங்கள் என்று சொல்லி நம்மை அறியாமலேயே நாம் சில விஷயங்களில், சில தவறுகளை செய்து விடுகின்றோம். அந்த வரிசையில் ஒரு வீடு என்று எடுத்துக் கொண்டால் அந்த வீட்டில் உள்ள உறுப்பினர்கள் உடுத்திய பழைய துணி நிறையவே இருக்கும். அந்த பழைய துணியை என்ன செய்வது என்று சிலருக்கு தெரியாது. அந்த பழைய துணிகளை இப்படி மட்டும் செய்து விடாதீர்கள். அது உங்களுடைய அடுத்த அடுத்த சந்ததியினருக்கு கூட பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அது என்ன தவறு என்பதை பற்றியும், பழைய துணிகளை என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவு என் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

river

நாம் சில முறை உடுத்திய ஆடைகளாக இருந்தால், கிழியாத புத்தம் புதிய ஆடைகள் ஆக இருந்தால் அதை நன்றாக துவைத்து விட்டு, கல் உப்பு போட்ட தண்ணீரில் ஒரு முறை அலசி வைத்து, நன்றாக காய வைத்து விட்டு அந்தத் துணிகளை மடித்து கஷ்டப்படுபவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். கிழிந்துபோன ரொம்பவும் அழுக்கான, ரொம்பவும் பழைய துணிகளை தானம் கொடுக்க கூடாது.

- Advertisement -

சரி, புதிய ஆடைகளை தானமாக கொடுக்கின்றோம். கிழிந்த பழைய ஆடைகள் நிறைய இருக்கின்றது. அதை என்ன செய்வது. நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இப்படிப்பட்ட ‘கிழிந்த ஆடைகளை ஓடும் நதியில் நீர் நிலைகளில் விட்டுவிட வேண்டும் என்று’, ஆனால் ஆடைகளை நீர்நிலைகளில் விடவே கூடாது.

wet-cloth

ஆடைகளை நீர்நிலைகளில் விடுவதன் மூலம் அந்த ஆடைகள் தண்ணீரின் அடியில் அதாவது நீர் ஊற்றிலோ அல்லது பூமியிலோ படிந்து விட்டால் அந்த இடத்தில் இருக்கும் நீரோட்டம் குறைந்து போவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. நீர் ஊற்று சுரக்க கூடிய இடத்தின் மேலே நம்முடைய ஆடைகள் போய் படிந்துவிட்டால் நீரூற்று சுரப்பது நின்றுவிடும். இதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

- Advertisement -

தண்ணீரிலும் நீரிலும் மக்கிப் போக முடியாத ஆடைகள் அப்படியே நீர்நிலைகளில் தங்கி விட்டால் இயற்கைக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த கஷ்டம் நம்மோடு போகாது. நமக்கு தண்ணீர் கஷ்டம் வருவதோடு சேர்த்து, நமக்கு அடுத்தடுத்து வரக்கூடிய சந்ததியினரும் தண்ணீர் இல்லாமல் வறட்சியில் கஷ்டப்படும் அளவிற்கு பிரச்சனைகள் பெரியதாக வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இனி பழைய துணிகளை ஓடும் ஆற்றிலோ அல்லது ஏரியிலோ கடலில் கூட போடாதீர்கள். அது தவறான ஒரு விஷயம்தான்.

clothes-lakshmi

கிழிந்த ஆடைகளை என்னதான் செய்வது. நிறைய பழைய துணிமணிகள் இருந்தால் வேறு வழியே கிடையாது. அதை நெருப்பில் இட்டு எரிக்கத்தான் வேண்டும். நிறைய பேருக்கு பயம் வந்துவிடும். அச்சச்சோ, நான் அணிந்த ஆடைகளை நெருப்பில் இடுவதா? வருடம் முழுதும் சேர்ந்த கிழிந்த ஆடைகளைத் தனியாக வீட்டிலேயே சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

burning-clothes

வருடத்திற்கு ஒருமுறை போகி பண்டிகை வரும் போது அந்த போகிப் பண்டிகையில், நெருப்பில் போட்டு ஆடைகளை எரிப்பது தவறு ஒன்றும் கிடையாது. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களோடு தேவையற்ற துணிகளையும் போட்டு எரித்து வந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. வீட்டில் உள்ள பொருட்களை அடிக்கடி நெருப்பில் போட்டு எரிப்பது என்பது தவறான ஒரு விஷயம்தான். வருடத்தில் ஒரு நாள் இதற்குத்தான் போகிப் பண்டிகையை நம் முன்னோர்கள் கொண்டாடி வந்தார்கள். அந்த நாளில் வீட்டில் தேவையற்ற பொருட்களை எடுத்து போட்டு நெருப்பில் பொசுக்கி விடுங்கள்.

cloth

இதற்காக பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் போட்டு எரித்து விடாதீர்கள். நம்முடைய சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும் பொருட்களை நெருப்பில் இடலாம், பாய் துடைப்பம் பழைய துணி பேப்பர் இவைகளை எரிப்பதில் தவறொன்றும் கிடையாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -