20 நிமிடத்தில் சுவையான சாம்பார் செய்வது எப்படி

Sambar-1

நமது அன்றாட உணவில் மூன்று வேலையும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இருக்கும் உணவு பதார்த்தங்கள் மிகவும் குறைவு. இந்த மூன்று நேர உணவின் போதும் உண்ணத்தக்க ஒரு குழம்பு வகைதான் சாம்பார். இந்த சாம்பார் குறைந்த நேரத்தில் செய்வது எப்படி என்ற வழிமுறைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Sambar

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 3 பல்
சின்ன வெங்காயம் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
உப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
முருங்கைக்காய் அல்லது வேறு ஏதுனும் காய் – தேவையான அளவு

சாம்பார் செய்முறை

ஒரு பிரஷர் குக்கரில் துவரம் பருப்பு 1/2 கப், 2 சின்ன வெங்காயம், 3 பல் பூண்டு ஆகியவற்றை போட்டு அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேகவைக்க வேண்டும். 5 முதல் 6 விசில் வரை நன்கு வேக விடமும்.

Sambar

இப்போது மற்றொரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு அதோடு காயையும் சேர்த்து வதக்கவும்.

- Advertisement -

இந்த கலவையில் 2 கப் தண்ணீர் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பருப்பு நன்கு வேகுவதற்குள் இந்த கலவையும் நன்கு கொதித்துவிடும்.

Sambar

பிறகு பருப்பு உள்ள குக்கரை திறந்து அதில் உள்ள பருப்பை நன்கு மசித்து, அதில் சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அதோடு கொதித்த காய்கறி மற்றும் அனைத்தையும் நீரோடு ஊற்றவும். தேவை பட்டால் தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த கலவையை 5 நிமிடம் மீண்டும் கொதிக்கவிடமும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியை போட்டு நன்றாக கலக்கி சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கவும்.

Sambar

குறிப்பு : இதில் எந்த காயை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இரண்டு மூன்று காய்கறிகளை சேர்த்துகூட இந்த சாம்பாரை செய்யலாம்.

சமைக்க எடுத்து கொள்ளும் நேரம்: 20 நிமிடங்கள்

சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை: 4

இதையும் படிக்கலாமே:
இடியாப்பம் செய்வது எப்படி

இது போன்ற மேலும் பல சமையல் குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have quick Sambar recipe in Tamil. This sambar recipe in Tamil is also called as Sambar seimurai or Sambar seivathu eppadi in Tamil. We can also say it as Sambar quick recipe in Tamil language.