இந்திய அணியின் பந்துவீச்சு சுமார் தான்! நாங்க தான் டாப் ! – தென்னாபிரிக்க வீரர்

ishanth

இந்திய அணியின் பந்துவீச்சு கடந்த சில காலமாக மிக அருமையாக உள்ளது. மேலும் இந்திய அணி மேற்கொண்ட அயலநாட்டு தொடர்களிலும் இந்திய அணி பந்துவீச்சு எதிரணிகளை வீழ்த்தி அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றும் அளவிற்கு பந்துவீச்சு பகுதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது இருக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

finch 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா சிறப்பாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை சாய்த்தார். 3வது போட்டியின் வெற்றியை தொடர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சு குறித்து அனைத்து நாடுகளிலும் உள்ள முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர். இந்நிலையில் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இந்திய அணியின் பந்து வீச்த்து குறித்து பேசியுள்ளார்.

ரபாடா கூறியதாவது : இப்போது உள்ள இந்திய அணியின் பந்துவீச்சு நன்றாக உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், எங்கள் அணியின் பந்துவீச்சு இப்போது எந்தநாட்டு வீரர்களையும் அச்சுறுத்தும் என்பதில் துளிகூட எனக்கு ஐயமில்லை. எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர் கூட்டணி உலகின் சிறந்த கூட்டணி என்றே நான் கூறுவேன்.

rabada

லுங்கி நெகிடி, பிளான்டெர் மற்றும் தலைசிறந்த பவுலரான டேல் ஸ்டெயின் போன்றோர் பந்து வீச்சினை நீங்களே பார்த்து இருப்பீர்கள் எனவே எங்களது அணி தான் தற்போது சிறந்த பந்துவீச்சு அணி என்று நான் கருதுகிறேன். வரும் உலகக்கோப்பை தொடரில் எங்களது அணியின் பந்துவீச்சு நிச்சயம் பேசப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

4 ஆண்டுகளாக எனக்கு இந்த பிரச்னை உள்ளது! கண்டிப்பாக அதிலிருந்து மீள்வேன் – கோலி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்