4 ஆண்டுகளாக எனக்கு இந்த பிரச்னை உள்ளது! கண்டிப்பாக அதிலிருந்து மீள்வேன் – கோலி

koli 2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நாளை அதிகாலை 5 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் துவங்கவுள்ளது. அதிகரித்துள்ளது. இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ தொடரை முதன் முறையாக வசப்படுத்தும். அதேவேளையில் போட்டியை ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கும்.

koli 1

இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்திய அணியில் சில மாற்றங்களை செய்ய உள்ளோம் . குறிப்பாக இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக அணியில் உமேஷ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு கைகொடுக்கும் என்பதால் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தனது காயத்தினை பற்றி பேசினார். எனக்கு கடந்த 2011ல் இருந்தே முதுகு பக்கத்தில் பின்பக்க வலி இருந்துகொண்டு வருகிறது. அதனை எனது பயிற்சிகளின் மூலம் நான் சரி செய்து வருகிறேன். இப்போது வெற்றி என்பதே நமக்கு முக்கியம். இந்த வலியை என்னால் சமாளிக்க முடியும் எனவே நான் கடைசி டெஸ்டிற்கு என் கவனத்தினை செலுத்த விரும்புகிறேன் என்றார்.

koli 2

மேலும் இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. எனவே இந்த தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று நம்பலாம். அஸ்வின் இன்னும் காயத்திலிருந்து மீளாலதாள் அவரின் இடம் நாளை காலையே தெரியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

கடைசி டெஸ்ட் போட்டிக்கான 11 பேர்கொண்ட ஆஸ்திரேலிய உத்தேச அணி அறிவிப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -