குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் ராதா கிருஷ்ண ஸ்லோகம்

raddhe-krishna-compressed

குடும்ப வாழ்கை என்பது மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் சிறந்த விடயங்களில் ஒன்று. ஒரு மனிதன் பிறரின் உதவியை பெற்று பதிலுக்கு அவன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற பாடத்தை போதிக்கும் முதல் வகுப்பறையாக குடும்பம் இருக்கிறது. எந்த ஒரு குடும்பத்திலும் பிரச்சனைகள் இருக்கவே செய்யும். ஆனால் அப்பிரச்னைகள் எல்லைமீறி சென்று குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆகியோருடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பல காலம் பிரிந்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இவையெல்லாவற்றையும் தீர்க்கும் ஒரு அற்புத ஸ்லோகமாக இந்த ராதா – கிருஷ்ண ஸ்லோகம் இருக்கிறது.

ராதா – கிருஷ்ண ஸ்லோகம்

ராதேஸம் ராதிகாப்ராண
வல்லபம் வல்லவீஸுதம்
ராதேஸேவித பாதாப்ஜம்
ராதா வக்ஷஸ்தலஸ்திதம்

ராதானுகம் ராதிகேஷ்டம்
ராதாபஹ்ருத மானஸம்
ராதாதாரம் பவாதாரம்
ஸர்வாதாரம் நமாமிதம்

கண்ணனாகிய கிருஷ்ணர் மற்றும் அவர் இதய கமலத்தில் வாசம் செய்யும் ராதா தேவியை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மனதில் ராதா – கிருஷ்ணனை நினைத்தவாறு குறைந்த பட்சம் 108 முறை உரு ஜெபித்து வந்தால் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் கணவன் – மனைவி மீண்டும் இணைந்து வாழ ஆரம்பிப்பார்கள். பல காரணங்களுக்குகாக ஏற்பட்ட சண்டையால் பிரிந்திருக்கும் உறவினர்களும், நண்பர்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் இருப்பர். பிறருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்களை மன்னித்து மறக்கும் பக்குவம் தோன்றும்.

- Advertisement -

திருமாலின் ஒன்பதாவது அவதாரமாக தோன்றியவர் ஸ்ரீ கிருஷ்ண பகவான். ஒரு சிறந்த இல்லறவாசி அதே நேரத்தில் சிறந்த ஞானி என தனது ஒரே பிறவியில் பல அம்சங்களில் வாழ்ந்து ஒரு முழுமையான அவதாரம் என புகழப்படுகிறார். திருமாலின் இதயத்தில் வாசம் செய்கிற லட்சுமி தேவி கிருஷ்ண அவதாரத்தின் போது ராதையாக அவதரித்து, கிருஷ்ணரையே தனது கணவராக வாய்க்க பெற்றார். ராதா தேவி உயிர்கள் அனைத்தின் மீதும் எதிர்பார்ப்பில்லா அன்பை பொழிபவள். அவளை போற்றும் இந்த ஸ்லோகத்தை துதிப்பதால் சிறந்த நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
நவகிரக தோஷங்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Radha krishna sloka in Tamil. It is also called as Krishnar mantra in Tamil or krishnar slokam in Tamil or Krishna slokam lyrics in Tamil.