16 வகையான செல்வங்களையும் பெற்றுத் தரும், இந்த ரகசிய குடுவை உங்களது வீட்டில் இல்லையா?

guduvai

நம்முடைய வீடாக இருந்தாலும், நாம் தொழில் செய்யும் இடமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு கட்டாயமாக ஒரு பாதுகாப்பு தேவைப்படுகிறது. சிலர் சொந்த வீடு கட்டும்போதே சில பரிகாரங்களை முறையாகச் செய்திருப்பார்கள். அப்படி இருக்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. வீடு கட்டும்போதோ அல்லது தொழில் செய்வதற்கான இடத்தை அமைத்துக் கொள்ளும்போதோ பரிகாரங்களையும், வாஸ்து சாஸ்திரங்களையும் சரியாக செய்யவில்லை என்றால் சில பிரச்சினைகள் நமக்கு ஏற்படும். அதாவது ஜாதகரீதியாக நமக்கு நல்ல நேரம் இருந்தாலும், நாம் இருக்கும் இடமானது நம் ஜாதக கட்டத்திற்கு பொருந்தவில்லை என்றால் சில பிரச்சனைகளை அது உண்டாக்க தான் செய்யும். நம் நல்ல நேரத்தை கூட கெட்ட நேரமாக மாற்றும் சக்தியானது, நம் வசிக்கும் இடத்திற்கு உண்டு என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். தொழில் செய்யும் இடத்தில் வேலை செய்பவர்கள் அக்கறை எடுத்து வேலை செய்யாமல் இருப்பார்கள். எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் தொழிலில் நஷ்டம் ஏற்படும். நம்முடைய வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். காரியத்தடை இருக்கும். இப்படி இருக்க என்ன செய்வது? என்று புரியாதவர்களுக்கு ஒரு சிறிய பரிகாரம் உண்டு. அது என்ன பரிகாரம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பிரச்சினை இருக்கும் இடத்தில் தான் இதை வைக்க வேண்டுமா என்ற சந்தேகம் வேண்டாம். எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகள் கூட நம்மை அதிகமாக பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்துகொள்ளலாம். அதாவது இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்மை சுற்றியும், நம் வீட்டைச் சுற்றியும், நம் தொழில் செய்யும் இடத்தை சுற்றியும் நம் கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு வளையம் ஒன்று ஏற்பட்டு விடும். எந்தவிதமான கெட்டதும் நம்மை அண்டவிடாமல் பாதுகாக்க இந்த ஒரு பரிகாரமே போதும்.

மண்ணால் செய்யப்பட்ட ஒரு புதிய குடுவையை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் அதை கோமியத்தால் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு அதனுள் இரண்டு கைப்பிடி அளவு சுத்தமான விபூதியை போட்டு கொள்ளவும். சுத்தமான விபூதி என்பது, பசுமாட்டு சாணத்தில் உருவாக்கப்பட்ட வறட்டியை எரித்து சாம்பல் செய்து, எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பு. வலம்புரிசங்கு ஒன்று, எலுமிச்சை பழம் ஒன்று, வெள்ளெருக்கு விநாயகர் ஒன்று, விரலிமஞ்சள் 2, ஜவ்வாது, சந்தனத்தூள், பாதரசம், பசும்பால், பசுநெய், கோமியம், அருகம்புல், அபிஷேக தீர்த்தங்கள் இருந்தால் எடுத்துக்கொள்ளலாம். புண்ணிய தீர்த்தம் இருந்தால் எடுத்துக்கொள்ளலாம். துளசி ஐந்து இலை, வில்வம் ஐந்து இலை. இந்த பொருட்கள் எல்லாவற்றிலும் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய குடுவையின் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் கட்டாயமாக ஒரு பொருட்களை கூட விட்டு விட வேண்டாம்.

clay-pot

இவை அனைத்தையும் குடுவைக்குள் ஒன்றாக போட்டு அதன் பின்பு ஒரு மஞ்சள் துணியால் அதன் வாய்ப்பகுதியை இறுக்கமாக கட்டி நம் வீட்டில் தோட்டத்திலோ அல்லது நம் வீட்டில் இருக்கும் வெளிப்புற இடத்திலோ கொஞ்சமாக பள்ளம் தோண்டி புதைத்து வைத்து விடுங்கள். அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை வளர்பிறையில் வரும் ஒரு வெள்ளிக்கிழமையில் தான் கட்டாயம் செய்ய வேண்டும். நம் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்திருக்கும். நம் வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளும் நீங்கும். நம் வீட்டை பாதுகாக்க ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்பட்டுவிடும்.

- Advertisement -

home

இதில் அடுத்ததாக ஒரு சந்தேகம் வரும். சொந்த வீட்டில் உள்ளவர்கள், சொந்த இடத்தில் தொழில் செய்பவர்கள் இதை செய்யலாம். வாடகை வீட்டில் இருப்பவர்கள், மாடி வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் என்ன செய்வது? வாடகை இடத்தில் தொழில் செய்பவர்கள் என்ன செய்வது? என்ற கேள்வி வரும். சிலர் அப்பார்ட்மெண்டில் குடி இருப்பார்கள். இவர்கள் எல்லாம் இப்படி ஒரு குடுவையை தயார் செய்து உங்கள் வீட்டு ஸ்லாபின் மேல் யார் கண்ணுக்கும் தெரியாமல் எடுத்து வைத்து விடலாம். பூமியில் புதைத்து வைத்தால் அதை மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வெளிப்புறத்தில் இந்த குடுவையை வைக்கும்போது இதில் கெட்டுப்போகும் பொருட்களான பால், தயிர், தீர்த்தம் போன்ற பொருட்களை மட்டும் சேர்க்காமல் மீதமுள்ள பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த குடுவையில் இருக்கும் பொருட்கள் குபேரனின் ஆசியையும், மகாலட்சுமியின் ஆசியையும் நமக்கு பெற்றுத் தந்து 16 வகையான செல்வங்களையும் பெறும் யோகத்தையும் நமக்கு தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
நீங்கள் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு முன் ஜென்ம சாபம் தான் காரணமா? சாபத்தை எப்படித்தான் சரி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have 16 selvam in Tamil. Athirstam peruga Tamil. Mahalakshmi arul pera. Prachanaigal theera Tamil.