உங்களின் கஷ்டத்தை தீர்க்கும் ராகவேந்திரரின் 108 போற்றிகள்

ragavendra-compressed

வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று ராகவேந்திரரின் திருவுருவப் படத்திற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்து, வாசனை மலர்களை கொண்டு ராகவேந்திரரின் திருஉருவ படத்தினை அலங்கரிக்க வேண்டும். ஒரு தாம்பூலத்தில் துளசி இலைகளையும், வாசனை மிகுந்த பூக்களையும் உதிரியாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மகானின் திருவுருவப் படத்திற்கு முன்பு அமர்ந்து மனதார உங்கள் வேண்டுதல்களை நினைத்து ஒரு நிமிடம் வேண்டி, உதிரிப் பூக்களை தூவி அர்ச்சனை செய்து இந்த 108 போற்றிகளை உச்சரித்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படியாக குறைந்துவிடும். உங்களுக்கான ராகவேந்திரரின் போற்றிகள் இதோ.

ragavendra

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
ஓம் கற்பக விருட்சமே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சாந்த ரூபமே போற்றி
ஓம் ஞான பீடமே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி
ஓம் ஜீவ ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீபிருந்தாவனமே போற்றி
ஓம் துளசி வடிவமே போற்றி
ஓம் தேவ தூதனே போற்றி
ஓம் பிரகலாதனே போற்றி
ஓம் திவ்ய ரூபமே போற்றி
ஓம் தர்ம தேவனே போற்றி
ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
ஓம் அன்பின் உருவமே போற்றி
ஓம் காவியத் தலைவனே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் வேத கோஷ பிரியனே போற்றி
ஓம் துவதை முனிவரே போற்றி

ragavendra

ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
ஓம் குருராஜரே போற்றி
ஓம் சுசீந்திரரின் சீடரே போற்றி
ஓம் மத்யவ மத பீடமே போற்றி
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி
ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
ஓம் ஸ்ரீஅனுமந்தப் பிரியரே போற்றி
ஓம் திம்மண்ணரின் புதல்வரே போற்றி
ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
ஓம் ஸ்ரீஹரி பக்தரே போற்றி
ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் அறிவின் சுடரே போற்றி
ஓம் பண்டித மேதையே போற்றி

ragavendrar

- Advertisement -

ஓம் தீய சக்தியை ஒழிப்பவனே போற்றி
ஓம் வெங்கட பட்டரே போற்றி
ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீபிராமணப் பிரியரே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஓம் மெய் ஞானம் தருபவரே போற்றி
ஓம் வியாதியைப் போக்குபவரே போற்றி
ஓம் அமானுஷ்ய சக்தியே போற்றி
ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி
ஓம் ஆனந்த நிலையமே போற்றி
ஓம் காஷாயத்தை அளித்தவரே போற்றி
ஓம் தூய்மை நிதியே போற்றி
ஓம் வரங்களை தருபவரே போற்றி
ஓம் கண்ணனின் தாசரே போற்றி
ஓம் சத்திய ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீஜகத் குருவே போற்றி
ஓம் பாவம் போக்குபவரே போற்றி
ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி
ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி

ஓம் மகிமை தெய்வமே போற்றி
ஓம் அணையா தீபமே போற்றி
ஓம் அகந்தையை அழிப்பவரே போற்றி
ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தவரே போற்றி
ஓம் மாஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
ஓம் கஷ்டங்கள் போக்குபவரே போற்றி
ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
ஓம் வியாச பகவான் ஆனவரே போற்றி
ஓம் சங்கு கர்ணரே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி
ஓம் குரு தேவரே போற்றி
ஓம் நன்மைகள் தருபவரே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் அருட்தவ சீலரே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
ஓம் புண்ணிய புருஷரே போற்றி

Ragavendra

ஓம் அமுத கலசமே போற்றி
ஓம் அழகின் உருவமே போற்றி
ஓம் சந்தானம் அளிப்பவரே போற்றி
ஓம் சாஸ்திரம் அறிந்தவரே போற்றி
ஓம் துளசிமாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மன்மதனை வென்றவனே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் நல்ல ஆயுள் தருபவரே போற்றி
ஓம் ஐஸ்வர்யம் அளிப்பவரே போற்றி
ஓம் அபயம் தருபவரே போற்றி
ஓம் உலகத்தைக் காப்பவரே போற்றி
ஓம் காந்தகண் பெற்றவரே போற்றி
ஓம் யதிராஜரே போற்றி
ஓம் ஓங்கார ரூபமே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஓம் துங்கை நதியின் தூயவரே போற்றி
ஓம் இணையிலா இறைவனே போற்றி
ஓம் விபீஷணரே போற்றி
ஓம் அனாத ரட்சகரே போற்றி
ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
ஓம் சுந்தர வதனரே போற்றி
ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
ஓம் நரஹரி பிரியரே போற்றி
ஓம் தியாக மூர்த்தியே போற்றி
ஓம் வாணியின் வீணையே போற்றி

இதையும் படிக்கலாமே
பெண்களுக்கு வெற்றியை தேடித்தரும் மந்திரம்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ragavendra 108 potrigal in Tamil. Ragavendrar potrigal in Tamil. Shri ragavendrar 108 potri in Tamil. Sree ragavendra mantra in Tamil.