நன்மைகள் பெருகச் செய்யும் ராகு பகவான் துதி

rahu-kethul-1
- Advertisement -

நவகிரகங்களில் சனிபகவானின் சக்தியை கொண்டவை நிழல் கிரகங்கங்களான “ராகுவும் – கேதுவும்” இதில் ராகு ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவருடைய பேச்சு பிறர்க்கு இனிமை தருவதாகவும், அவருக்கு நீண்ட நாட்கள் அவதியுறும் நோய்கள் ஏதும் உண்டாகா அமைப்பு உருவாகும். அதே ராகு பகவான் ஜாதகத்தில் கேடான நிலைகளில் இருந்தால் மேற்கூறியவற்றிக்கு எதிரிடையான பலன்கள் ஏற்படும். அப்படி ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எல்லோரும் துதிக்க வேண்டியது “ராகு பகவான்” துதி இதோ.

துதி:
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு
அமுதம் ஈயப் போகுமக் காலை
யுன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்னகியல்
மீண்டும் பெற்றஇராகுவே உனைத்துதிப்பென்
ரட்சிப்பாய் ரட்சிப்பாயே.

- Advertisement -

இந்த ராகு பகவான் துதியை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ரகுபகவானின் சந்நிதிக்குச் சென்று, ராகுவிற்கு நல்லெண்ணெய் தீபமேற்றி 9 முறை துதிக்க, ராகு பகவானின் தோஷங்கள் விலகி உங்கள் பேச்சு சிறந்து அதன் மூலம் உங்களுக்கு லாபமும், கொடிய நோய்கள் பீடிக்காத நிலையும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பிறவி தோஷம் நீங்க துதிக்க வேண்டிய பாடல்

இது மேலும் பல துதிகள், மந்திரம், ஸ்லோகம் மற்றும் ஆன்மீக தகவல்களை பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -