- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஉடனடியான பிரகாசத்தை தரக்கூடிய கேழ்வரகு மாவு ஃபேஸ் பேக்

உடனடியான பிரகாசத்தை தரக்கூடிய கேழ்வரகு மாவு ஃபேஸ் பேக்

- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சிறுதானிய உணவுகளில் கேழ்வரகும் ஒன்று. பல சத்துக்கள் நிறைந்த இந்த கேழ்வரகை நாம் உணவாக எடுப்பதற்கு பதிலாக நம் முகத்தில் தடவும் போது அதனால் நமக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் கேழ்வரகு ஃபேஸ் பேக் எப்படி செய்வது என்றும் அதனால் என்ன பலன் ஏற்படும் என்றும் தான் பார்க்கப் போகிறோம்.

ராகி மாவில் அதிக அளவு இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம் சத்து இருக்கிறது. இதனால் உடலில் ரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு எலும்புகள் ஆரோக்கியமாக திகழவும் உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் செரிமான பிரச்சனையும் தீர்க்க உதவுகிறது. இவ்வளவு நன்மைகள் வாய்ந்த ராகியை நாம் முகத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.

- Advertisement -

கேழ்வரகை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது எந்த அளவுக்கு நமக்கு நன்மைகள் தருகிறதோ அதே அளவிற்கு நாம் முகத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் பொழுதும் அது பல நன்மைகளை தருகிறது. முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை நீக்குவதற்கு உதவுகிறது. மேலும் சருமத்துளைகளை சரி செய்வதற்கு உதவுகிறது. அது மட்டுமல்லாமல் கருமை திட்டுக்கள் மறையவும், வெயிலினால் ஏற்பட்ட கருமை மாறவும் உதவுகிறது.

இதற்கு ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கேழ்வரகு மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மாவை நாம் அப்படியே கேழ்வரகு மாவாகவும் வாங்கலாம். அவ்வாறு வாங்க விருப்பமில்லாதவர்கள் கேழ்வரகு வாங்கி வந்து சுத்தம் செய்து நன்றாக காய வைத்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்தக் கேழ்வரகு மாவுடன் நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு நமது சரும வகைக்கு ஏற்றவாறு தயிர், எலுமிச்சை, தக்காளி, பால் என்று எதை வேண்டுமானாலும் கலந்து உபயோகப்படுத்தலாம். இவ்வாறு உபயோகப்படுத்துவதற்கு முன்பாக முகத்தை சுத்தமாக கழுவி விட்டு சிறிதளவு காய்ச்சாத பசும்பாலை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். அது உணர்ந்த பிறகு அதை கழுவி விட்டு துண்டை வைத்து துடைத்துவிட்டு பிறகு உபயோகப்படுத்த வேண்டும்.

இந்த பேக்கை நாம் முகத்திற்கு மட்டும்தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று இல்லை. உடல் முழுவதுமே இதை நாம் உபயோகப்படுத்தலாம். அதனால் எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது. முகத்தில் இதை தடவி விட்டு 20 நிமிடம் அப்படியே உலர விட வேண்டும். அவ்வாறு உலர விடும் பொழுது நாம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் நன்மையை தரும். ஏனென்றால் இந்த மாவு காய காய முகத்தில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

20 நிமிடம் கழித்து முகப்பரு இல்லாதவர்கள் நன்றாக மசாஜ் செய்து கழுவிக்கொள்ள வேண்டும். முகப்பரு இருப்பவர்கள் மசாஜ் செய்வதை தவிர்த்து விட்டு சாதாரண குளிர்ந்த நீரால் கழுவினாலே போதும்.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்தல் மற்றும் இளநரை பிரச்சினை தீர எண்ணெய்

உடனடியான பிரகாசத்தை தரக்கூடிய இந்த கேழ்வரகு மாவு ஃபேஸ் பேக்கை வாரத்தில் இரண்டு முறை உபயோகித்தால் கருமை நிறம் மாறி முகம் நன்றாக பிரகாசமாகும். முகச்சுருக்கம் விரைவில் ஏற்படாது.

சற்று முன்