- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கால்சியம் சத்து நிறைந்த காலை உணவு. பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலியை, வரவிடாமல் தடுக்க இந்த...

கால்சியம் சத்து நிறைந்த காலை உணவு. பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலியை, வரவிடாமல் தடுக்க இந்த இட்லியை சாப்பிடுங்க.

- Advertisement -

அந்த காலத்தில் நம்முடைய பாட்டிகள் ராகி களியும், கம்பங்களியும் சாப்பிட்டு வந்ததால் தான், 90 வயது 95 வயதில் கூட முதுகு வலி இல்லாமல் மூட்டு வலி இல்லாமல் நடக்குறாங்க, கீழே உட்கார்ந்து எந்திரிக்க முடிகிறது. இப்போது உள்ள பெண்களுக்கு எல்லாம் 30 வயதை கடக்கும் போதே மூட்டு வலி, முதுகு வலி தரையில் அமர்ந்து எந்திரிக்க முடியாத சூழ்நிலை. இதை சரி செய்ய அவர்கள் கட்டாயம் கால்சியம் சத்து நிறைந்த பொருட்களை உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். ராகியில் நிறைய கால்சியம் சத்து அடங்கியிருக்கிறது. ராகியோடு சிறுதானியத்தில் சாமை சேர்த்து, அருமையான ஒரு இட்லி செய்வது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் ராகி – 1 கப், சாமை – 1 கப், உளுந்து – 1/2 கப், வெந்தயம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ராகியை மட்டும் தனியாக கழுவி கூட இதில் சேர்க்கலாம். ராகியில் கொஞ்சம் தூசு அதிகமாக இருக்கும். எல்லா பொருட்களையும் சுத்தம் செய்து விட்டு இதில் நல்ல தண்ணீரை ஊற்றி ஐந்து மணி நேரம் ஊற வைக்கணும்.

- Advertisement -

பிறகு இதை கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். கிரைண்டரில் போட்டு ஆட்டுவது நல்லது. நைசாக அரைப்பட்ட மாவை வழித்து ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு உங்கள் கையை கொண்டு கரைத்து மூடி போட்டு 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

மாவு புளித்து வந்த பிறகு கரண்டியை வைத்து நன்றாக அடித்து கலக்கி உங்களுக்கு தேவையானது போல இட்லி அல்லது தோசை வார்த்து சாப்பிடலாம். இந்த இட்லியை ஏழிலிருந்து பத்து நிமிடங்கள் நன்றாக வேக வேண்டும். ராகியை உணவோடு சேர்த்துக் கொள்ளும் போது நன்றாக வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். இல்லை என்றால் வயிறு உபாதைகள் ஏற்படும்.

- Advertisement -

இட்லி என்றாலே வெள்ளை நிறத்தில் அழகாக மல்லிகை பூ போல இருந்தால்தான் நம் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கும். இந்த இட்லியை வீட்டில் இருக்கும் குழந்தைகளை பெரியவர்களை சாப்பிட வைக்க என்ன செய்வது. இட்லியை சின்னச்சின்ன துண்டுகளாக கத்தியால் வெட்டிக்கோங்க. கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு, கடுகு கருவேப்பிலை தாளித்து வெட்டிய இட்லிகளை அதில் போட்டு மேலே இட்லி மிளகாய் பொடி தூவி, பிரட்டி ஒரு ஸ்பூன் வைத்து கொடுத்து விடுங்கள்.

இந்த இட்லி பிடிக்காது என்பவர்கள் கூட அதை ருசித்து சாப்பிட்டு விடுவார்கள். ஆரோக்கியமான உணவு பண்டங்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் நம் ஆரோக்கியத்திற்கு அதுதான் நல்லது. இப்படி ராகி இட்லியோடு  அசைவப் பிரியார்களாக இருந்தால் மீன் குழம்பு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும். சைவ பெரியார்களாக இருந்தால் கார சட்னி, புளிக்குழம்பு, கத்திரிக்காய் குழம்பு, என்று புளி சேர்த்த குழம்பு சைடிஷ் ஆக வைத்துக் கொள்ளும்போது ருசி அதிகரிக்கும்.

சற்று முன்