- Advertisement -
Homeஜோதிடம்ராகு பகவானால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் மற்றும் பரிகாரங்கள்.

ராகு பகவானால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் மற்றும் பரிகாரங்கள்.

- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி நம் அனைவருக்கும் தெரியும். நோய்கள் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களும், உணவு வகைகளும் காரணம் என்றாலும் நவகிரகங்களின் பாதிப்பாலும் நமக்கு உடல் உபாதைகள் ஏற்படும். அந்த வகையில் இன்று ராகு பகவானால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை பற்றியும் அதை சரி செய்வதற்குரிய வழிபாட்டு பரிகாரத்தை பற்றியும் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் எந்த கிரகத்தால் பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த கிரகம் அதற்குரிய உறுப்புகளில் ஏதாவது உபாதைகளை ஏற்படுத்தும் என்பதனால் தான் நவக்கிரகங்களும் உடல் உபாதைக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. உடல் நல குறைபாடு ஏற்படும்பொழுது அதற்குரிய மருத்துவரை அணுகி மருந்து சாப்பிடுவது போல் எந்த கிரகத்தால் நம் ஜாதகத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய பரிகாரத்தை நாம் செய்தால் விரைவிலேயே உடல் நலம் சீராகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சரி இப்பொழுது ராகு பகவான் யாருடன் சேர்ந்தால் உடல் உபாதைகள் ஏற்படும் என்று பார்ப்போம். ராகு பகவான் சனி உடன் சேர்ந்தாலும், சூரியன், செவ்வாய், சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்களுடன் சேரும்பொழுது அதனால் நம் உடலில் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்பது முற்றிலும் உண்மை.

பொதுவாக ராகு பகவானால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகள் என்று பார்க்கும் பொழுது தொண்டை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ராகு பகவான் காரணமாக திகழ்கிறார். மேலும் மூச்சுத்திணறல், ஜீரண மண்டலத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளான புளித்த ஏப்பம், பசியின்மை போன்றவையும், மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்கும் ராகுவே காரணம்.

- Advertisement -

மேலும் ராகு பகவானின் ஆதிக்கம் நடக்கும் காலத்தில் ஜாதகருக்கு உடலில் ஆங்காங்கே கருந்திட்டுகள் உருவாவதை காண முடியும். அது மட்டுமல்லாமல் பெண்கள் ராகுவால் பாதிக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பான முறையில் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ராகு பகவான் நம் மனதில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவார்.

ராகு பாகவானின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு நமக்கு பிடித்த ஏதாவது ஒரு இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தின் மந்திரத்தை தினமும் ஜெபிக்க வேண்டும். அவ்வாறு ஜெபிப்பதன் மூலம் ராக பகவானின் ஆதிக்கம் குறையும். அது மட்டுமல்லாமல் ராகு பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து வெளியே வருவதற்கு நமக்கு உதவி புரியக்கூடிய தெய்வமாக காளியம்மனும் துர்க்கை அம்மனும் விளங்குகிறார்கள்.

- Advertisement -

அவர்களை முறையாக வழிபட்டு வருவதன் மூலமும் ராகு பகவானின் பாதிப்பிலிருந்து வெளியில் வர முடியும். ராகு பகவானுக்குரிய தானியமாக உளுந்து திகழ்கிறது. உளுந்தை பிறருக்கு தானமாக தருவதன் மூலமும் உளுந்தை பயன்படுத்தி செய்யக்கூடிய உணவுகளை தானமாக தருவதன் மூலமும் அவரின் பாதிப்புகள் குறைந்து உடல் உபாதைகளில் இருந்து வெளிவரலாம்.

இதையும் படிக்கலாமே: சந்திர பகவானால் ஏற்படும் உடல் உபாதைகள்.

உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் பொழுது மருத்துவரை அணுகுவதோடு மட்டுமல்லாமல் ஜாதக ரீதியாக இருக்கும் பிரச்சனையை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டையும் பரிகாரத்தையும் செய்து விரைவில் உடல் நல ஆரோக்கியம் பெறுவோம்.

சற்று முன்