ராகு கேது பெயர்ச்சி – 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்

மேஷம்:


மேஷ ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 55/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
 • திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்
 • வெள்ளிக்கிழமைகளில் காளியை வணங்கவும்.
 • சனி கிழமைகளில் அனுமன் கோயிலிற்கு சென்று அவரிடம் மனமுருகி வேண்டி விளக்கேத்துங்கள்.

ரிஷபம்:


ரிஷப ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

- Advertisement -
 • விநாயகர் கோயிலிற்கு சென்று அருகம்புல் சார்த்தி வழிபடலாம்.
 • பவுர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நயினாரை மனதில் நினைத்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
 • வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
 • செய்வாய் கிழமைகளில் கேது பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்.
 • ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மிதுனம்:


மிதுன ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள்.
 • பத்ரகாளியம்மனுக்கு விளக்கேற்றி பூஜை செய்யவும்.
 • சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
 • கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலிற்கு சென்று இறைவனை தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கடகம்:


கடக ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வணங்குங்கள்.
 • விநாயகர் வழிபாடு மிகவும் உயர்வை தரும்.
 • வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
 • திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் உள்ள ராகு சன்னதிக்கு சென்று அங்குள்ள பகவானை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம்:


சிம்ம ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 70/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • கார்த்திகை விரதம் இருந்து முருகனுக்கு தீபம் ஏற்றுங்கள்.
 • பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.
 • பத்ரகாளியம்மனுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்யவும்.
 • சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்யுங்கள்.
 • திருத்தருமபுரம் ஸ்ரீ யாழ்முரிநாதரை தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கன்னி:


கன்னி ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 80/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
 • ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படையுங்கள்.
 • வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.
 • பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
 • திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள தகட்டூர் பைரவர் கோயிலிற்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

துலாம்:


துலாம் ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுங்கள்.
 • துர்க்கை வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
 • சுவாத்தியன்று லட்சுமி நரசிம்மருக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
 • திருவாரூருக்கு அருகேயுள்ள திருத்துறைப்பூண்டியில் அருள்பாலிக்கும் பவ ஔஷதீஸ்வரரை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

விருச்சகம்:


விருச்சக ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 65/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • பௌர்ணமி நாளன்று திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் வாருங்கள்.
 • சனிக்கிழமைகளில் அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றி வாருங்கள்.
 •  ராகுவுக்கு நீல நிற வஸ்திரம், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.
 • தென்கரைக்கோட்டை கல்யாணராமரை தரிசித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு:


தனுசு ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 55/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • பிரதோஷ நாள் அன்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றிவாருங்கள்.
 • வெள்ளிக்கிழமைகளில் நாக தேவதையை வழிபடுங்கள்.
 • சனிக்கிழமைகளில் அனுமனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யுங்கள்.
 • திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயிலிற்கு சென்று இறைவனை தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மகரம்:


மகர ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 50/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
 • விநாயகரையும், நரசிம்மரையும் வழிபட்டு வாருங்கள்.
 • வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்கை அம்மனை வழிபடுங்கள்.
 • மதுரையிலுள்ள ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயிலிற்கு சென்று வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கும்பம்:


கும்ப ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 75/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பத்திரகாளி அம்மனுக்கு தீபமேற்றி வழிபடுங்கள்.
 • செய்வாய் கிழமைகளில் கேது பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
 • வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றிவாருங்கள்.
 • விருத்தாசலத்தில் உள்ள விருத்தபுரீஸ்வரரை தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மீனம்:


மீன ராசி நண்பர்களே இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களது ராசிக்கான மதிப்பெண் 65/100.

இந்த காலகட்டத்தில் நீங்கள் மேலும் நல்ல பலன்களை பெறுவதற்கான பரிகாரங்கள்.

 • வியாழக்கிழமைகளில் ராகவேந்திர சுவாமியை வழிபடுங்கள்.
 • காக்கைக்கு அன்னமிட்ட பின் சாப்பிடுங்கள்.
 • வெள்ளி கிழமைகளில் மாரி அம்மன் கோயிலிற்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
 • சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலிற்கு சென்று வழிபடுங்கள்.
 • திருவாடானையில் உள்ள ஆதிரத்னநாயகேஸ்வரரை தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.