ராகு, கேது, சனி கிரக தோஷங்கள் நீக்க கூறவேண்டிய மந்திரம்

navagrahas-nine-planets

இந்த புவியில் தோன்றிய அனைத்து உயிர்களின் மீதும் விண்ணில் உள்ள நவகிரகங்களின் ஆற்றல் எப்போதும் உண்டு. அதிலும் மனம் மற்றும் சிந்தனைத் திறன் கொண்ட மனிதன் மீது இந்த கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அவ்வளவு சாதாரணமானதல்ல. அதிலும் நவகிரகங்களில் சோதனைகள் மற்றும் முன்வினைப்பயன்களுக்காக தண்டனைகளை அதிகம் கொடுக்கும் கிரகங்களான “ராகு, கேது, சனி” கிரக தோஷங்களால் ஒரு மனிதன் படும் பாடு சொல்லி மாளாது. அப்படி அத்தகைய கிரக தோஷங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள “ஸ்ரீ மாருதியான” “ஆஞ்சயனியரின் இம்மந்திரத்தை கூறலாம்.
Navagragham

அனுமன் மந்திரம்:

“அஞ்ஜனா கர்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரம்மச் சாரினாம்
துஷ்ட கிரஹ விநாஸாய
ஹனுமந்த முபாஸ்மஹே”

இம்மந்திரத்தை சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாக அருகிலுள்ள ஆஞ்சேநேயர் கோவிலுக்கு சென்று, எலுமிச்சம் பழத்தை கரண்டி அதில் நெய் ஊற்றி விளக்கேற்றி 108 முறை கூறி ஆஞ்சநேயரை வழிபடவேண்டும். மேலும் இம்மந்திரத்தை கிரக தோஷங்கள் விலக துதித்து வரும் சனிக்கிழமைகளில் உளுந்தையும் வெல்லத்தையும் ஏதேனும் ஒரு ஏழைக்கு அல்லது உங்களிடம் பணிபுரியும் பொருளாதார வசதி குறைந்த பணியாளர்களுக்கு தானம் வழங்க வேண்டும். இப்படிச் செய்வதால் அந்த ஆஞ்சநேயரின் பூரண அருள் உங்களுக்கு கிடைத்து உங்கள் கிரக தோஷம் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
கேட்ட இடத்தில் பணம் கிடைக்க, உதவிகள் பெற மந்திரம்

English Overview:
Here we have graga dhosha pariharam mantra in Tamil. By chanting this mantra one can get away from Rahu kethu thosam, Sani thosam and other gragha thosam.