கேட்ட இடத்தில் பணம் கிடைக்க, உதவிகள் பெற மந்திரம்

varuna-baghavan-1

மனிதன் ஒரு சமுதாய விலங்கு” என்ற சொல்வழக்கை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த உலகத்தில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் நேரடி அல்லது மறைமுக உதவியின்றி வாழ முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் மனிதர்களாகிய நாம் வாழும் காலத்தில் தவிர்க்கமுடியாத சில காரணங்களால், சில விஷயங்களில் பிற மனிதர்களின் உதவி நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. நாம் எதிர்பார்க்கும் அந்த உதவி பொருளுதவியாகவோ அல்லது வேறு ஏதாவது உதவிகளாகவோ இருக்கலாம். அத்தகைய நபர்கள் அவர்கள் எதிர்பார்க்கும் அந்த உதவிகள் அவர்களுக்கு கிடைக்க பாட வேண்டிய மந்திரம் பாடல் இது.

Vinayagar

ஸ்லோகம்:
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.

தமிழ் மொழியில் இருக்கும் சிறப்பான மந்திர சக்தி கொண்ட இந்த பாடலை, காலை வேளைகளில் மற்ற கடவுள்களின் மந்திரங்களைக் கூறி அவர்களை வணங்கும் முன்பு, விநாயகரின் படத்திற்கு முன்போ அல்லது அவரை மனதில் நினைத்தோ இம்மந்திர பாடலை 9 முறை பாடி உங்கள் பணிகளை மேற்கொள்ளுங்கள். வினைகளைக் நீக்கும் அந்த விநாயகப் பெருமானின் அருளால், நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
தரித்திரம் நீங்கி எல்லா வளங்களையும் பெற உதவும் மந்திரம்

English Overview:
Here we have Lord Ganapathi slogam in Tamil. By chanting this slogam one can easily get the help from others.