ராகு கேதுவால் யோகம் பெறும் ராசிகள்

good shine astrology
- Advertisement -

நவகிரகங்களிலே அசுப கிரகங்களாக கருதப்படுபவர்கள் தான் இந்த ராகுவும் கேதுவும். இவர்கள் ஒரு ராசிக்குள் இருந்தால் அந்த ராசிக்காரர்களுக்கு பலவிதமான துன்பங்களும், இவர்களுடைய பெயர்ச்சினாலும் மற்ற ராசிகாரர்களுக்கு இன்னல்களும் ஏற்படும். அப்படியான இந்த கிரங்களின் இணை சில ராசிகளுக்கு நன்மை தருவதாக உள்ளது.

இந்த ராகுவுக்கும் கேதுவுக்கும் சொந்தமாக ராசி என்பது கிடையாது. ஒன்பது நவகிரகங்களில் இருக்கும் மற்ற கிரகங்களுக்கும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி தெய்வங்களாக இருப்பார்கள். இவர்களுக்கு என தனியாக எந்த ஒரு ராசியும் கிடையாது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பதால் பெரும்பாலும் அசுப பலன்களே தருவதாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். சனி கிரகத்திற்கு பிறகு மெதுவாக நகரக் கூடிய கிரகமாக இவர்கள் விளங்குகிறார்கள். கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிடம் நுழைந்தார்கள்.

இந்த வருடம் முழுவதும் இவர்களின் இதே ராசியில் பயணிப்பார்கள். இதன் மூலம் 12 ராசிகளுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மூன்று ராசிகளுக்கு மட்டும் நல்ல பலன்களை தர இருக்கிறார்கள். யார் அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ரிஷப ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி சாதகமான சூழ்நிலையில் உருவாகியுள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். இது வரை வாழ்க்கையில் சந்தித்த அனைத்து இன்னல்களுக்கும் தீர்வு கிடைக்கும். வாழ்க்கை துணையால் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். பொருளாதார நிலை மேம்படும் திருமண தடைகள் விலகும்.

மேஷ ராசி

ராகு கேதுவின் பெயர்ச்சியால் இந்த ஆண்டு மேஷ ராசியினருக்கு சிறப்பான பலன்களை பெறப் போகிறார்கள். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது புதிய வருமானத்திற்கான வழிகள் அதிகரிக்கும் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக் கூடும்.
ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் தொழில் போன்றவற்றில் ஈடுபடுவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். புதிய முதலீடு புதிய தொழில் போன்றவற்றை தொடங்குவார்கள். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

கும்ப ராசி

ராகு கேது உங்களுக்கும் நல்ல பலன்களை கொடுக்கப் போகிறார்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியக்கூடிய சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். பணத்தடைகள் விலகும் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். உங்களின் பேச்சுத் திறமையால் அதிக செல்வாக்கு பெறுவீர்கள். நினைத்த காரியங்களை சாதித்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: துரோகம் செய்யக் கூடாத ஐந்து ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான் இந்த பதிவில் உள்ள கருத்துக்கள். இதுவும் அவரவர் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உரியதுதான் இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

- Advertisement -