துரோகம் செய்யக் கூடாத ஐந்து ராசிகள்

cry lady astrology
- Advertisement -

இந்த பதிவில் உள்ள தலைப்பை பார்த்தவுடன் அனைவருக்கும் இந்த ஒரு கேள்வி நிச்சயமாக தோன்றியிருக்கும். அது இந்த ஐந்து ராசிகாரர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது துன்பப்படுத்தக் கூடாது என்றால் மற்ற ராசிக்காரர்களை செய்யலாமா என்பது தான்? இந்தக் கேள்வி தவறு கிடையாது நியாயமானது தான்.

ஐந்து ராசிகாரர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது என்றால் மற்ற ராசிகாரர்களுக்கு செய்யலாம் என்பது இதன் பொருள் அல்ல. இறைவன் படைப்பில் உருவான எந்த ஒரு உயிருக்கும் நாம் துன்பம் விளைவிக்க கூடாது இது தான் நியதி. இதில் இந்த ஐந்து ராசிகாரர்களுக்கு நம்மால் ஏதேனும் துன்பமோ வேதனையும் ஏற்பட்டால் நமக்கு கிடைக்கக் கூடிய துன்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பது தான் இதன் பொருள்.

- Advertisement -

நாம் வாழும் வாழ்க்கையில் யாரையுமே துன்பப்படுத்தாமல் வாழ்வது தான் சிறந்த வாழ்வியல். ஜோதிடம் குறித்த இந்த பதிவில் யார் அந்த ஐந்து ராசிக்காரர்கள் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

துரோகம் இழைக்க கூடாத ஐந்து ராசிக்காரர்கள்

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்த வரையில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அதே போல் ஒவ்வொரு ராசிக்கான தெய்வங்கள் கிரக தேவதைகள் இப்படியானவைகள் இருக்கின்றன. இதே போல தான் ஒரு சில ராசிகளுக்கு தெய்வங்கள் நெருக்கமாக இருக்கும்.

- Advertisement -

அப்படி இருக்கையில் அவர்கள் இயற்கையாகவே ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இறை நம்பிக்கை அதிகமாக வைத்து இறைத் தொண்டு செய்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுடைய எண்ணம் செயல் போன்றவை இறை சிந்தனையிலே மூழ்கி இருக்கும். ஆகையால் இப்படியானவர்களை நாம் துன்பப்படுத்தும் போது அதற்கான பலனை நாம் கட்டாயம் சீக்கிரம் அனுபவிப்போம் என்பது தான் இதற்கு காரணம்.

சரி இப்போது யார் அந்த ஐந்து ராசிக்காரர்கள் என்று பார்ப்போமா. சிம்மம், விருச்சகம், கும்பம், தனுஷ், மீனம். இந்த ஐந்து ராசிகாரர்களை தான் நாம் கட்டாயம் துன்பப்படுத்தக் கூடாது. இவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான ராசிக்காரர்கள் ஆகவும் இறையருளை பெற்ற ராசிக்காரர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

- Advertisement -

நம்மால் இவர்களுக்கு சிறிதளவு துன்பம் ஏற்பட்டாலும் அதன் மூலம் இவர்கள் படும் வருத்தம் நம்மையும் நம் குடும்பத்தையும் பெரும் அளவு பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் இவர்களை மட்டும் அல்லாது யாரையும் துன்பப்படுத்தாமல் நம்மால் யாரும் காயப்படாமல் நடந்து கொள்வதே நியாயமான தர்மமான வாழ்க்கை முறை.

இதையும் படிக்கலாமே: ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

அதை நாம் முறைப்படி செய்தாலே போதும் இது போன்ற விஷயங்களுக்கு நாம் பயப்படத் தேவையில்லை என்கிற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம். இந்த பதிவில் உள்ள தகவலின் நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதை பின்பற்றலாம்.

- Advertisement -