ராகு கேது உச்சம் தொடும் ராசிகள்

ragu kethu jathagam
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் இடமாற்றத்தினால் 12 ராசிகளுக்கும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். இதில் சில ராசிகள் நன்மைகளை அனுபவிப்பார்கள். சில ராசிகளுக்கு கெடு பலன்கள் இருக்கும். இது நகரும் கிரகங்களும் அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கக் கூடிய கிரகங்களின் தன்மையை பொறுத்து அமையும்.

அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக் கூடிய ராகு கேது இருவரின் இணைவால் சில ராசிகள் நற்பலன்களை பெறப் போகிறார்கள். நவகிரகங்களில் மெதுவாக விளங்கக் கூடிய கிரகமானது சனி பகவான் தான். அவருக்கு அடுத்து மெதுவாக பின்னோக்கி நகரக் கூடிய இரண்டு கிரகங்களெனில் அது ராகுவும் கேதுவும் தான்.

- Advertisement -

இந்த ராகுவும் கேதுவும் கடந்த ஆண்டு தங்களுடைய இடத்தை மாற்றி உள்ளார்கள். இதில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் தற்போது பயணம் செய்து வருகிறார்கள். இந்த மாற்றத்தினால் நற்பலனை பெறக் கூடிய ராசிகளை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

மேஷ ராசியில் ராகு பகவான் ஏழாவது வீட்டில் ரசித்து வருகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இது வரையில் திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் விலகி சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இதன் மூலம் நிம்மதியான வாழ்க்கையை வாழக் கூடிய யோகம் கிடைக்கும்.

- Advertisement -

ரிஷப ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் கேது ஆறாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அது மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் இருப்பவர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்க கூடிய காலம் இது. ஆரோக்கியம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். இதனால் வருமானம் பெருகும் நிதி நிலைமை உயரும்.

மிதுன ராசி

ராகு கேதுவால் இந்த ராசிக்காரர்கள் பல நற்பலன்களை பெற போகிறார்கள். காதல் வாழ்க்கை குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். இந்த காலக்கட்டத்தில் இவர்களும் உற்சாகமாக இருந்து உடன் இருப்பவர்களின் உற்சாகமாக வைத்திருப்பார்கள். தொழில்துறையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் லாபம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: சனிப்பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசி

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை தான் இந்த கணிப்புகள் இதில் அவரவரின் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்கள் உண்டு. ராகு கேதுவின் மாற்றத்தினால் நன்மை ஏற்படக்கூடிய ராசிக்காரர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

- Advertisement -