சனிப்பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசி

sani astrology
- Advertisement -

சனி பகவான் தற்போது கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். இதன் பலனாக 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்களை தந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சில ராசிகளுக்கு மோசமான பலன்களும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டகரமான யோகங்களையும் தந்து கொண்டிருக்கிறார்.

அதிலும் இந்த ஒரு ராசிக்காரருக்கு தொட்டதெல்லாம் பொன்னாக மாறக் கூடிய யோகத்தை தருகிறார். யார் அந்த ராசிக்காரர் என்ன மாதிரியான யோகங்களை பெறப் போகிறார் என்பதை பற்றிய தகவலை ஜோதிடம் குறித்த இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கன்னி ராசி

சனி பகவான் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். இந்த ஸ்தானமானது கன்னி ராசிக்காரர்களுக்கு அபரிதமான ராஜ யோகத்தை தரக் கூடியதாக உள்ளது. இந்த பலனால் கன்னி ராசிகார்கள் என்னென்ன யோகங்களை பெறப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்

கன்னி ராசி பிறந்தவர்களுக்கு இந்த 2024 ஆம் ஆண்டில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறக்கூடிய பொன்னான காலம் காத்திருக்கிறது. இந்த ஆண்டில் வெற்றிக்கனியை கைப்பற்ற கூடியவர்களும் நீங்கள் தான். எதிர்மறை சிந்தனைகள் அனைத்தும் நீங்கி நேர்மறையாக சிந்தித்து வாழ்க்கையில் முன்னேறும் கூடிய காலக்கட்டம் இது.

- Advertisement -

கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை பல மடங்கு உயரப் போகிறது. வியாபாரிகளுக்கு நல்ல முறையில் வியாபார நடந்து லாபம் அதிகரிக்கும். இது வரை வராத பணம் கைக்கு வர தொடங்கும். பணவரவு தடையின்றி வந்து கொண்டே இருப்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து நிதி நிலைமை சீராகும்.

இந்த காலக்கட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிரிகளின் பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்கி விடும். சூழ்ச்சி செய்ய வேண்டும் என நினைப்பவர்களும் தானாக மனம் மாறி வழி விட்டு ஒதுங்கி விடுவார்கள். இதனால் பணியிடம், வியாபாரம், குடும்பம் என அனைத்து இடத்திலும் நிம்மதியாக உங்களுடைய பயணத்தை தொடரலாம்

- Advertisement -

பெண்களுக்கு சொத்து சேர்க்கையில் அதிகரிக்கும். ஆடை ஆபரணங்களை வாங்கி குவிக்க கூடிய காலம் இது. புதிய தொழில்கள் துவங்குபவர்கள் இந்த காலத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம். எதிர்பாராத வகையில் தன வரவும் பொருள் வரவும் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாக மாறக் கூடிய காலமாக இருந்தாலும் முதலீடு செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

புதிய தொழில் கூட்டு தொழில் சிறு தொழில் என எதை துவங்கினாலும் அதை பற்றிய தெளிவான சிந்தனையுடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். சிறு தொழில் உற்பத்தி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஓரளவிற்கு சுமாராக இருக்கும். ஆடை, ஆபரண துறைகளில் நல்ல லாபத்தை பார்க்கலாம் நகை தொழில் செய்பவர்களுக்கு கொஞ்சம் மந்தமாக இருக்கும்.

சினிமா, ஊடகம் தொலைக்காட்சி போன்றவற்றில் வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபமும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். அதே போல் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கும் நல்ல லாபத்தை பார்க்கலாம். எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் வரும் வருமானத்தை நல்ல முறையில் கவனமாக சேமித்து பழகுங்கள்.

இதையும் படிக்கலாமே: குபேரருக்கு பிடித்த ராசிக்கள்

சனியின் இந்த பெயர்ச்சியின் மூலம் கன்னி ராசியினர் பெறக்கூடிய யோகங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவியாக இருக்கும். இந்த தகவல்கள் அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் படி தொகுக்கப்பட்டது என்ற தகவலுடன் பதிவினை முடிவு செய்து கொள்வோம்

- Advertisement -