ராகு திசையால் வரக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கு இந்த பொருளை யாருக்காவது தானம் கொடுத்தால் போதும். பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக கடந்து விடலாம்.

ragu-ketu1
- Advertisement -

நம்முடைய ஜாதக கட்டத்தில் ராகு திசை நடக்கும் போது வாழ்வில் எதிர்பாராத நிறைய சங்கடங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குறிப்பாக இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். திருமண வாழ்வில் தோல்வி, கணவன் மனைவிக்கிடையே பிளவு, போன்ற பிரச்சனைகளை அதிகமாக சந்திப்பார்கள். உத்திரம், உத்திராடம், கிருத்திகை, ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், இந்த நட்சத்திரங்களை கொண்டவர்களுக்கு இளவயதிலேயே இந்த ராகு திசையால் பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ராகு திசையால் வரக்கூடிய பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஆன்மீக ரீதியாக சுலபமாக என்னென்ன பரிகாரங்களை செய்யலாம்.

முதலில் ராகுவால் வரக்கூடிய பிரச்சனையை சமாளிக்க வேண்டுமென்றால் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் வன துர்க்கையை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. வன துர்க்கையை வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் உங்கள் வீட்டின் அருகில் இருக்கக் கூடிய துர்கை அம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஞாயிற்றுக்கிழமையில் ராகு கால நேரத்தில், அதாவது மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் கருப்பு உளுந்து தானமாக கொடுக்க வேண்டும். வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த கருப்பு உளுந்தை ஞாயிற்று கிழமை ராகு கால நேரத்தில் தானம் கொடுக்கும் போது நம்முடைய கஷ்டங்கள் குறையும்.

துப்புரவு பணியாளர்களுக்கு செருப்பு தானம் கொடுக்க வேண்டும். இதேபோல கொஞ்சம் வசதி வாய்ப்பு உடையவர்கள் வெள்ளியால் செய்த சர்ப்பத்தை மாரியம்மன் கோவிலுக்கு தானமாக கொடுக்கலாம், அம்மன் கோவில்களில் உண்டியலில் செலுத்தலாம், அல்லது கோவிலில் உள்ள அர்ச்சகருக்கு இந்த வெள்ளி சர்பத்தினை தானம் கொடுத்தாலும் ராகு திசையால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

- Advertisement -

ஆகாச கருடன் கிழங்கை வாசலில் மாட்டி வைத்தால் அந்த வீட்டில் ராகுவால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறையும். சுயம்புவாக புற்று மண் உருவான கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

இறுதியாக மிக மிக சுலபமான ஒரு பரிகாரம். முச்சந்தி மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து அந்த முச்சந்தி மண்ணோடு கல் உப்பு மிளகாய் இவைகளை சேர்த்து வீட்டில் இருப்பவர்கள் தலையை சுற்றி, இந்த எல்லா பொருட்களையும் நெருப்பில் போட்டுப் பொசுக்கினால் ராகு திசையால் வரக் கூடிய பாதிப்புகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேல் சொன்ன பரிகாரங்களில் உங்களால் எந்த பரிகாரத்தை செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். ராகு திசை மூலம் உண்டாக்கக்கூடிய கஷ்டங்கள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -