அவுட் ஆன பின் பெவிலியனுக்கு செல்லாமல் நேராக வலைப்பயிற்சிக்கு சென்ற இந்திய வீரர்- வீடியோ

rahul-1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (03-01-2019) அதிகாலை 5 மணிக்கு சிட்னி நகரில் துவங்கியது. இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

rahul

இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல். இந்த போட்டியிலும் ஏமாற்றத்தினையே அளித்தார். 6 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்களை மட்டுமே குவித்து ஹாசல்வுட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த டெஸ்ட் தொடரில் தொடர்ந்து விரைவாக அவுட் ஆகி வருகிறார்.

இதனையடுத்து, ராகுல் அவுட் ஆனதும் பெவிலியனுக்கு செல்லாமல் இந்திய அணியின் நிர்வாக அதிகாரி ஒருவரை கூட்டிக்கொண்டு நேராக வலைப்பயிற்சிக்கு சென்றார்.அப்போது அவரை பந்துவீச சொல்லி பயிற்சி எடுத்துவருகிறார்.

இதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் அந்த உதவியாளர். இவரால் ரன்களை குவிக்கமுடியவில்லை ஆனால், இவரின் உழைப்பு அதிகம் நிச்சயம் இந்த நிலை மாறும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான ராகுல் சிறப்பான வீரர் தான் என்றாலும் இந்தக்கலாம் அவருக்கு சற்று கடினமான நேரம் என்றே கூறவேண்டும்.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியின் பந்துவீச்சு சுமார் தான்! நாங்க தான் டாப் ! – தென்னாபிரிக்க வீரர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்