12ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

rahu 1

ஒருவருடைய ஜாதகத்தில் பன்னிரெண்டாம் வீடு என்பது மோட்சஸ்தானம் என்று கூறப்படுகிறது. உங்களது வாழ்வில் ஏற்படக்கூடிய விரயத்தையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். உங்களுக்கு ஏற்படக்கூடிய செலவுகள், நஷ்டங்கள், துன்பம், பாவம், வறுமை, துரதிஷ்டம், இவையெல்லாம் இந்த வீட்டில் அடங்கும். உங்களின் மறைமுக எதிரிகளை கூட இந்த வீட்டை வைத்து சொல்ல முடியும்.

12ல் ராகு உள்ளவர்களுக்கு வாழ்க்கை போர்க்களமாக தான் இருக்கும். உங்களின் வாழ்க்கையில் அதிகமான ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பீர்கள். ஒருசிலசமயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்ல முன்னேற்றப் பாதையில் செல்வது போல காணப்பட்டாலும், திடீரென்று அதலபாதாளத்தில் விழுந்து விடுவீர்கள். உங்களின் வாழ்க்கை நிலைமையைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்தவர்களாக இருப்பீர்கள். உங்களின் வருமானமானது அதிகப்படியாக வந்து கொண்டே இருந்தாலும், அதற்கான செலவுகள் இருமடங்காக முன்கூட்டியே வந்துவிடும்.

Thirunageswaram temple

உங்கள் உடல்நலத்திற்கு ஏதாவது ஒரு பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். அதிக அளவு பணமானது மருத்துவத்திற்கு செலவாகும். கண் தொடர்பான பிரச்சனைகள் வந்து கண்ணாடி அணியும் நிலைமை வரும். அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அவதிப்பட்டு வருவீர்கள். உடல்நிலை பிரச்சினை என்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவருக்கும் வந்து கொண்டேதான் இருக்கும். இதனால் அதிகமான மன அழுத்தம், மன கஷ்டம் அடிக்கடி ஏற்படும். 12ல் ராகு உள்ளவர்களுக்கு நீரில் கண்டம் உள்ளது. நீர்நிலைகளில் சென்று குளிக்கும் போது அதிக கவனம் கொள்வது அவசியம்.

- Advertisement -

உங்களது நண்பர்களை நீங்கள் அதிகமாக நம்ப வேண்டாம். நீங்கள் விலகி சென்றாலும் உங்களின் நண்பர்களின் மூலம் உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். நட்பு வட்டாரத்தை குறைப்பது நன்மையை தரும்.

Rahu in lagnam Tamil

சில சமயங்களில் உங்களுக்கு செலவுகள் கைமீறி செல்லும்போது அதை சமாளிப்பதற்கு குறுக்கு வழியை நாடி விடுவீர்கள். இதன் மூலம் சிறைக்கு செல்வதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது. இதனால் கஷ்டத்தை எதிர்கொள்ளும் சமயங்களில் உங்கள் மனதினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம்.

நீங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர்கராக இருக்க வாய்ப்பு உண்டு. செவிலியர், மருத்துவர், அல்லது உளவியல், ஆன்மீகம் இவற்றின் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு முழுமையான திருப்தி என்பது இருக்காது. நிலையற்ற தன்மையும், அதிருப்தி நிலையும் ஏற்படும்.

rahu

பன்னிரெண்டில் ராகுவினால் ஏற்படும் நன்மைகள்
நீங்கள் நல்ல மனிதர் என்ற பெயரை மற்றவர்களிடத்தில் வாங்கியிருப்பீர்கள். கஷ்டம் என்று உங்களை நாடி வருபவர்களுக்கு நீங்கள் பேசும் பேச்சானது நல்ல ஆறுதலாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை அறிந்து பக்குவப் பட்டவர்களாக இருப்பீர்கள்.

பரிகாரம்
உங்களுக்கு வருமானம் அதிகமாகும் சமயங்களில் ஆதரவற்றவர்களுக்கு ஒரு சிறு தொகையை உதவியாக கொடுக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு அவசியம். இப்படி உதவி செய்யும் புண்ணியம் உங்களை பிரச்சினைகளிலிருந்து காக்கும். மன அமைதிக்காக சிவன் கோவிலுக்கு சென்று தியானம் மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
11ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu in 12th house in Tamil. 12 il Rahu palan. Rahu in twelth house effects remedies in Tamil.