ராகு கால துர்கை ஸ்தோத்திரம்

durga-compressed

சில சமயங்களில் நம் வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு கஷ்டங்கள் வந்து நம்மை சூழ்ந்து விடும். அதற்கான காரணம் என்னவென்று கூட நம்மால் அறிந்திருக்க முடியாது. வாழ்க்கை, நமக்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஏற்றத்தாழ்வுகளை கொடுத்திருக்கும். இவற்றையெல்லாம் நம் தலையெழுத்து என்று சிலர் கூறுவர். ஆனால் இதற்கெல்லாம் காரணம் நம் ஜாதக கட்டங்கள் தான்‌. நம் ஜாதகத்தில் கிரகங்கள் சரியாக அமரவில்லை என்றால் எதிர்பாராத கஷ்டங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அந்த துயரத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வேண்டி நெய்தீபம் ஏற்றி இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி வந்தால் போதும். உங்களுக்கான துர்க்கையம்மன் ஸ்தோத்திரம் இதோ.

durga

வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கும் ஆனவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

உலகை ஈன்றவள் துர்க்கா உமையும் ஆனவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை ஆனவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

durgai amman

செம்மையானவள் துர்க்கா ஜெபமும் ஆனவள்
அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்
இம்மையானவள் துர்க்கா இன்பம் ஆனவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

- Advertisement -

உயிருமானவள் துர்க்கா உடலும் ஆனவள்
உலகமானவள் துர்க்கா எந்தன் உடமை ஆனவள்
பயிருமானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்றும் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

துன்பம் அற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையும் ஆனவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

குருவும் ஆனவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமும் ஆனவள் எங்கள் குடும்ப தீபமே
திருவும் ஆனவள் துர்க்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

durga

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே எனைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

கன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!

durga

காவிரிப் பெண்ணே வாழ்க!

இந்த ஸ்தோத்திரத்தை நாம் ராகுகாலத்தில் உச்சரித்து வந்தால் திருமணம், மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், நம் வீட்டில் செல்வச் செழிப்பு இவை அனைத்தும் கைகூடிவரும்.

இதையும் படிக்கலாமே
வரலக்ஷ்மி நோன்பு ஸ்லோகம்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Durga stotram in Tamil. Rahu kala durga stotram. Rahu kala durga slogam. Rahu kala durga slokas in Tamil. Rahu kala durga ashtakam.