வரப்போகின்ற ராகு கேது பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசி எது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

rahu ketu astro

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள், மதியம் 02.05 க்கு ராகு கேது பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. மிதுன ராசியில் இருந்து ராகு பகவான், ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான், விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு உங்களுடைய ராசிக்கு, ராகு கேதுவால் என்ன பலன்கள், இந்தப் பெயர்ச்சியினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன பரிகாரம் செய்வது, என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 12 ராசிகளுக்கும் மிகத் துல்லியமான கணிப்பும், பரிகாரமும் உங்களுக்காக.

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் நிதி நிலைமை சீராகும். உங்களுடைய முன்னேற்றத்திற்காக, உங்கள் மனதில் வைத்துக் கொண்டிருக்கும் பிளான் பற்றிய விவரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவசரப்பட்டு எந்த விஷயங்களையும் வெளிப்படையாக பேசி பெருமைப்பட்டுக் கொண்டுவிட்டால், எதிர்காலத்தில் அது நடக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. வார்த்தையில் நிதானம் தேவை. பிரிந்து போன சொந்தபந்தம் தானாகவே வந்து ஒன்று சேரும். சொந்தத் தொழிலில் அதிக கவனம் தேவை. பங்குதாரர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்பு உண்டு சேமிப்பு உயர்ந்து, ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: வாரந்தோறும் திங்கள் கிழமைகளில், விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அருகம்புல் அணிவித்து வழிபட்டு வாருங்கள்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்கள் இனி வரப்போகும் காலத்தில், பொறுமையோடு செயல்பட வேண்டும். நீங்கள் நல்லதையே செய்தாலும், அது அடுத்தவர்கள் கண்ணிற்கு கெட்டதா தான் தெரியும். முடிந்தவரை குடும்பத்தில் பிரச்சனை என்று வந்தால், விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் அளவோடு பழகுங்கள். சொந்த விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சொந்தத் தொழிலை விரிவுபடுத்துவதற்கு கடன் வாங்க வேண்டாம். மற்றபடி அலுவலகப் பணியும், வியாபாரமும் சுமூகமாக தான் செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு ஒருவேளை சாப்பாடு வாங்கிக் கொடுக்கலாம். தினமும் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் இனி வரப்போகும் காலகட்டத்தை மிகவும் உஷாராக கையாள வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆனால், விடாமுயற்சியை கைவிடக்கூடாது. அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்கும் பட்சத்தில் அதற்கான சன்மானம் குறைவாகத்தான் கிடைக்கும். இருப்பினும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு, உங்கள் பிரச்சனைகளை நீங்களே சமாளித்துக் கொள்வீர்கள். அவ்வப்போது, மன நிம்மதி இல்லாத சூழல் ஏற்படும். அப்போதெல்லாம் இறை வழிபாட்டில் மனதை ஈடுபடுத்துங்கள். வெளியூர் பயணம் செல்ல வேண்டிய சூழ்நிலை வரும். ஆரோக்கியத்தில் கவனம் காட்டுங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் வீண் சண்டை போடவேண்டாம். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். கொஞ்சம் கவனத்தோடு செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கமே.

- Advertisement -

பரிகாரம்: வாரந்தோறும் சனிக்கிழமை அன்று, பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால் நல்லது நடக்கும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் நீண்டநாள் கனவு நிறைவேறும் என்று கூட சொல்லலாம். எப்படியாவது உழைத்து சம்பாதித்து உங்களது குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று துடிப்போடு செயல்பட போகிறீர்கள். வெற்றியும் உங்களுக்கு கிடைக்கும். இருப்பினும் தேவையில்லாத மனக்குழப்பம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. உங்களது குழந்தைகளின் படிப்பில், பெற்றோர்கள் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும். அலுவலகத்தில் உங்களை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. நாக்கை அடக்கினால் நிச்சயம் முழு வெற்றியையும் அடையலாம். அதிகம் பேசாதீர்கள்.

பரிகாரம்: தினம் தோறும் வீட்டில் இருந்தபடியே அம்மனை நினைத்து வழிபாடு செய்யுங்கள். ஏழை பெண் குழந்தைகளுக்கு உதவி செய்வது எதிர்பாராத யோகத்தை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
பல போராட்டங்களை எதிர்கொண்டு வந்த சிம்மராசிக்காரர்களுக்கு இனி வரப்போகும் காலகட்டம், அதிர்ஷ்டத்தை தரப்போகும் காலமாகத்தான் இருக்கப்போகின்றது. உங்களது நெருங்கிய நண்பராக இருந்தாலும் முடிந்தவரை அவர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருந்து கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும் உறவினர்களிடம் நல்ல பெயர் வாங்க முடியாது. தொழிலில் பல புதிய யுக்திகளை புகுத்தி, பெரிய வெற்றியை அடையப் போகிறீர்கள். உங்களது பாக்கெட் எப்போதும் நிரம்பி இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

பரிகாரம்: முடிந்தால் நரசிம்மர் கோவிலுக்கு சென்று மாதம் ஒருமுறை வழிபாடு செய்யுங்கள். பெருமாள் வழிபாடு நன்மை தரும். ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியை செய்து வரலாம்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் தேவையற்ற மன பயம் வரும். எல்லாத்தையும் தள்ளி வைத்துவிட்டு, வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு, தைரியத்தோடு செயல்படுங்கள். கட்டாயம் தோற்றுப் போக மாட்டீர்கள். வீட்டில் உள்ள நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு இடையே பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை அனுசரித்து செல்லுங்கள். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை நம்பி எந்த ரகசியங்களையும் சொல்ல வேண்டாம். உங்கள் ஆவணங்களை, பத்திரமாக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் லாபம் எப்போதும் போல் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: ராகவேந்திரா சாய்பாபா போன்ற குருமார்களை வழிபாடு செய்து வரலாம். வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை சாத்துவது நன்மை தரும்.

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி கொஞ்சம் சங்கடங்களை தரப்போகின்றது. பயப்பட வேண்டாம். மன உறுதியோடு செயல்பட்டால் வெற்றி உங்களை வந்து சேரும். தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். முடிந்தவரை அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையோடு செயல்படுங்கள். கோபம் கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வந்தாலும், வேலையை தக்க வைத்துக் கொள்வதில் தான் உங்களுடைய நினைப்பு இருக்க வேண்டும். சொந்த தொழில் எல்லாவற்றையும் அனுசரித்து சென்றால், உங்களுக்கான லாபத்தை நீங்கள் பெறுவீர்கள். கையில் இருக்கும் பணம் கொஞ்சம் செலவாகும். மாணவர்கள் அதிக அக்கறை எடுத்து படிக்க வேண்டும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அரளிப் பூ வாங்கி அர்ச்சனை செய்து வாருங்கள். முடிந்த உதவிகளை முதியவர்களுக்கு செய்யுங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
இந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தையும் தரும். அதே சமயத்தில் சின்ன சின்ன சங்கடங்களையும் தரப் போகின்றது. உங்களுடைய வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படும். சொந்த தொழிலில் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். ஆனாலும், எல்லா பிரச்சனைகளையும் தாண்டி கடினமாக உழைத்து, கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டு என்ற மனப்பக்குவமும் உங்களிடத்தில் இருக்கும். முடிந்த வரை யாரை நம்பியும் பத்திரங்களில் கையெழுத்து போடவேண்டாம். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பண பரிமாற்றத்தில் ஈடுபடும்போது கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் அதிக அக்கறையோடு படிப்பது நல்லது.

பரிகாரம்: தினம் தோறும் முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டு வழிபாடு செய்யுங்கள். செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானுக்கு முல்லை பூ அணிவித்து வழிபாடு செய்து நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வருடம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறார்கள் என்று கூட சொல்லலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். இருப்பினும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு குழி தோண்ட, உங்கள் நண்பர்களே சதித் திட்டம் தீட்டுவார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நண்பர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இருந்துக்கோங்க. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்த தொழிலில் அதிகப்படியான உழைப்பை போட்டு அதிகப்படியான லாபத்தை ஈட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள். ஏழை பெண் குழந்தைகளுக்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு இது நாள் வரை இருந்த சோம்பேறித்தனம், உடலை விட்டு நீங்கி, சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். வேலையில் இடமாற்றம் ஏற்படும். சம்பள உயர்வோடு இடமாற்றம் கிடைத்தால் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு சிரமப்பட்டு செயலாற்றுவீர்கள். வெற்றி உங்களுக்கே கிடைக்கும். உங்களை சுற்றி உள்ளவர்களிடத்தில் கட்டாயம் நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். அலுவலகத்தில் நீங்களே எதிர்பாராத நல்ல பெயர் உங்களுக்கு தேடி வரும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. படிப்பில் அதிக கவனத்தோடு ஈடுபட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு நல்ல பலனைத் தேடித்தரும். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் திறமையோடு செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். இருப்பினும், ஏழரைச்சனியின் தாக்கம் உள்ளதால் எல்லா விஷயத்தையும் யோசித்துத்தான் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அவ்வப்போது ஓய்வு இல்லாமல், பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கடன் வாங்கி சொந்த தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் தாராளமாக வாங்கலாம். முடிந்த வரை தேவையற்ற பொருட்கள், ஆடம்பரப் பொருட்களை வாங்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். சேமித்து வைத்துக்கொள்வது நன்மை தரும்.

பரிகாரம்: முடிந்தவரை ஊனமுற்றவர்களுக்கு, இயலாதவர்களுக்கு, ஏழை குழந்தைகளுக்கும் உதவிகளை செய்து வாருங்கள். நேர்மையோடு நடந்துகொள்ளுங்கள். முருகன் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

மீனம்:
Pisces zodiac sign
இதுநாள் வரை பொறுமையுடன் செயல்பட்டு கொண்டு இருந்த நீங்கள், துடிப்புடன் செயல்பட்டு நினைத்ததை நினைத்த மார்க்கத்தில், முடிக்க பார்ப்பீர்கள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவார்கள். அதேசமயம் வருமானம் அதிகரித்து, கடன் பிரச்சினையும் குறைய போகின்றது. வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவதற்கு நல்ல தருணம் வந்துவிட்டது. உலகத்தைப் புரிந்து கொண்டு செயல்பட தொடங்கப் போகிறீர்கள் என்று சொல்லலாம். சொத்து வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு கூடிய விரைவில் நிறைவேற போகின்றது.

பரிகாரம்: முடிந்தவரை ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்து வாருங்கள். அம்மன் வழிபாடு நல்ல பலனை கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களுக்கு சென்று வரலாம்.