2022 – ராகு கேது பெயர்ச்சி! எந்தெந்த ராசிக்காரர்களை ஆட்டி படைக்கும்ன்னு நீங்களும் தெரிஞ்சிக்க வேண்டாமா?

rahu-ketu
- Advertisement -

2022 ஆம் ஆண்டில் ராகு, கேது இரண்டு கிரகங்களும் ஒரே சமயத்தில் பெயர்ச்சி ஆக இருக்கிறது. இதன் விளைவாக ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டப் பலன்களும், ஒரு சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டங்களும் உண்டாக வாய்ப்புகள் உண்டு. ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு அடுத்து 18 மாதம் கெடு பலன்கள் ஏற்படப் போகின்ற ராசிகள் யாரெல்லாம் என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்:
உங்கள் ராசியில் ராகு பகவான் பெயர்ச்சி ஆக போகிறார். கேது பகவான் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆவதால் மேஷ ராசிக்காரர்கள் பொறுத்தவரை குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பிரிவு உண்டாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை ஒத்துழைத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து, விட்டுக் கொடுத்துச் செல்வது நலம் தரும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறையுடன் இருக்க வேண்டும். சிறு சிறு உடல் ஆரோக்கிய பிரச்சனைகளை கூட உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள். பண ரீதியாக பல இடங்களில் அலைந்து திரிய வேண்டி இருக்கும்.

- Advertisement -

துலாம்:
உங்கள் ராசியில் கேது பகவான் பெயர்ச்சி ஆக இருக்கிறார். இதனால் பண ரீதியான விஷயத்தில் போராட்டங்கள் இருக்கும். போதிய வருமானம் அல்லது வெளியிடங்களில் கொடுத்த பணம் திரும்பி வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே யார் பெரியவர்? என்கிற போட்டி மனப்பான்மை இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. வியாழன் மற்றும் சனி பகவான் அமர்ந்து இருக்கும் இடம் சரியாக இல்லாததால், உங்கள் ராசிக்கு தொடர்ந்து தடைகளும், தடங்கல்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு, எனவே அலட்சியம் காட்ட வேண்டாம்.

தனுசு:
தனுசு ராசியைப் பொறுத்தவரை ராகு கேது பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய கவலையை மேலோங்க செய்யும். போதிய சாதுரியம் இல்லை எனில் கடன் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிக்கும். உங்கள் ராசியில் இருந்து ஐந்தாம் இடத்தில் இருக்கும் ராகு தவறான முடிவுகளை எடுக்க வைக்கும். எனவே திட்டமிடாமல் எந்த ஒரு செயலையும் செய்வதை தவிர்ப்பது நல்லது. எச்சரிக்கை இல்லாமல் இருந்தால் பண விஷயத்தில் பல இழப்புகளை சந்திக்க நேரலாம். கேதுவினால் கெடுபலன்கள் இல்லை என்றாலும் அதிர்ஷ்டப் பலன்களும் கிடைக்கப் போவது இல்லை.

- Advertisement -

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டின் ராகு, கேது பெயர்ச்சி மூலம் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். ஒருவரை ஒருவர் மனஸ்தாபத்துடன் சந்திக்கக் கூடிய சூழ்நிலை உருவாகக்கூடும். பேசும் வார்த்தைகளில் கவனம் இல்லாவிடில் உறவில் விரிசல் ஏற்படும். கேது பகவான் மூலம் உங்களுக்குக் கெடுபலன்கள் இல்லை என்றாலும், ராகு அமர்ந்திருக்கும் இடமானது ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது மட்டும் அல்லாமல் வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு கிடைக்க வேண்டிய அதிர்ஷ்டங்கள் இடம் மாறி போக வாய்ப்பு உண்டு. பயணங்களின் பொழுது வேகத்தை தவிர்த்து விவேகத்துடன் இருப்பது உத்தமம்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை கொடுக்கும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. தேவையான நேரத்தில் பணம் கிடைக்காமல் அலைச்சல் ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள், உடன் இருப்பவர்கள் மூலம் உங்களுக்குக் கெடுபலன்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு, எனவே யாரையும் நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம், இதனால் ஏமாற்றம் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -