இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி: பண மழையில் நனைய போகும் அந்த 4 ராசிக்காரர்கள் யார் யார்?

rahu-ketu

தனுசு:
சார்வரி வருடம் ஆவணி மாதம் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்குள் சஞ்சாரம் செய்யப் போகிறார். கேது பகவான் பன்னிரண்டாம் வீட்டிற்குள்  சஞ்சாரம் செய்ய போகிறார்.

Dhanusu Rasi

படித்து முடித்து இதுநாள்வரை வேலை இல்லாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு, கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்க போகிறது. இருக்கும் வேலையை விட, இன்னும் நல்ல வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு, நல்ல முன்னேற்றமான பலன் உண்டு. வேலையில் இருப்பவர்களுக்கு நிச்சயமாக பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுக்கு வரப்போகும் வருமானத்தில் நிறைய சேமிக்க போகிறீர்கள். சிலருக்கு வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

திருமணத் தடை இருந்தவர்களுக்கு நல்ல வரன் கை கூடி வரும். குழந்தை வரம் கிடைக்கும். சொந்தத் தொழிலில் புதிய முயற்ச்சிகள் மேற்கொள்ளலாம். புதிய முதலீட்டை அதிக படுத்தலாம். உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று லாபங்கள் பெருகிக்கொண்டே இருக்கும். சொந்தத் தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். அதை திருப்பி அடைக்கும் அளவிற்கு வருமானமும் வந்து விடும். மொத்தத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளித் தான் தரபோகிறது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சார்வரி வருடம் ஆவணி மாதம் நடக்கப்போகும் ராகு கேது பெயர்ச்சியில் ராகு பகவான் ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்யப்போகிறார். கேது பகவான் பதினோராம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய போகிறார்.

Magaram rasi

- Advertisement -

இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சந்தோஷத்தை அள்ளித் தரப் போகின்றது. உங்கள் முன்னோர்கள் செய்த பாவங்களுக்கான தோஷங்கள் அனைத்தும் கூட இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலமாக நிவர்த்தியாக போகிறது என்பதை மறந்து விடாதீர்கள். இதுநாள் வரை உங்களுக்கு இருந்த பல பிரச்சினைகளில், நிம்மதியாக தூங்கி கூட இருக்க முடியாது. ஆனால் இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு மன அமைதியைத் தந்து, நல்ல உறக்கத்தை தரப்போகிறது.

நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். வீண் விரையங்கள் குறையும். சுப செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர போகிறீர்கள். சொத்துக்கள் வாங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பிரச்சனைகள் அனைத்தும் தீரப் போகிறது என்று நீங்கள் பெருமூச்சு விடலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சார்வரி வருடம் ஆவணி மாதம் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியில் ராகு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்யப்போகிறார். கேது பகவான் 10-ம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய போகிறார்.

Kumbam Rasi

உங்களுக்கு வாழ்க்கையில் இருந்த சின்ன சின்ன தடைகள் கூட இந்த ராகு கேது பெயர்ச்சியால் சரியாகி விடப்போகிறது. சொந்தத் தொழிலில் தடை. வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனை. கல்வி பயில்வதில் தடங்கள். புதிய சொத்து வாங்குவதில் பிரச்சனை. இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாமே ஆவணி மாதம் படிப்படியாக குறையத் தொடங்கும். இதுவரை தடைப்பட்டிருந்த அனைத்தும் வெற்றிப் படி ஏறி செல்ல போகிறது.

தாயார் வழியில் மட்டும் சற்று செலவுகள் ஏற்படக்கூடிய தருணங்கள் வரலாம். பழைய கடன்களை எல்லாம் விரைவாக திருப்பி கொடுத்து விடுவீர்கள். உங்களது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. வசதி வாய்ப்புகள் அதிகரிக்க கூடும். இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சுகமான வாழ்க்கையை தான் அள்ளித்தர போகிறது.

மீனம்:
சார்வரி வருடம் ஆவணி மாதம் நடக்கக்கூடிய ராகுகேது பெயர்ச்சியில் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய போகிறார். கேது பகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய போகிறார்.

Meenam Rasi

உங்களுக்கு ராகுபகவான் யோகத்தை அள்ளித்தர போகின்றார். சந்தோஷ மழையில் நனைய போகிறீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடியும். நீண்ட நாட்களாக ஒரு லட்சியம் உங்கள் மனதில் இருந்தால், அந்த லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளும் தருணம் இப்போது வந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். தீராத பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். நடக்கவே நடக்காது என்று நினைத்திருந்த ஒரு காரியம் கூட இந்த ராகு கேது பெயர்ச்சியால் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில்  மரியாதை அதிகரிக்கும். உங்களது மேலதிகாரிகள் நீங்கள் செய்யாத விஷயத்துக்கு கூட உங்களை பாராட்ட செய்வார்கள். புகழின் உச்சிக்கே செல்ல போகிறீர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இந்த ராகு கேது பெயர்ச்சியை சந்தோஷமாக வரவேற்க காத்திருங்கள்!

இதையும் படிக்கலாமே
எந்த ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் சேரக்கூடாது தெரியுமா? சேர்ந்தால் இது தான் நடக்கும்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu ketu palan.. Rahu ketu palangal in Tamil. Rahu ketu peyarchi. Rahu ketu peyarchi palan.