ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு படாதபாடு பட்ட ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது! எந்த ராசின்னு தெரிஞ்சிக்கனுமா?

வருகின்ற செப்டம்பர் மாதம் ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த பெயர்ச்சியினால் ‘லக்’ அடிக்க போகும் ராசிக்காரர் யாரென்று தெரியுமா? அந்த ராசிக்காரர்கள் தங்களது வாழ்வில் படாதபாடு பட்டு இருப்பார்கள். கிட்டதட்ட 2 தலைமுறைகள் வரை இந்த ராசிக்காரர்கள் எந்த சுகத்தையும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். சதா பிரச்சனை, கவலை என்றே காலம் போயிருக்கும். செப்டம்பர் 24 இல் சனி பகவான் சுய வீட்டிலும், ராகு சுக்ரன் வீட்டிலும், கேது விருச்சிக ராசியிலும் அமர்ந்து இந்த ராசிக்கு யோகத்தை தரவிருக்கிறார் என்றே கூறலாம்.

sani-temple-1

வாழ்க்கையில் எந்த நல்லதும் தடங்களின்றி நடந்து இருக்காது. ஒரு பிரச்சனை முடிந்தால், அடுத்த பிரச்சனை ரெடியாக லைன் கட்டி நிற்கும். இவர்கள் பேராசை கொண்டவர்கள் கூட கிடையாது. தங்களது நியாயமான ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவே படாதபாடு பட வேண்டியிருக்கும். என்னடா! இது வாழ்க்கை என்ற விரக்தி எப்போது ஏற்படுகிறதோ, அப்போது தான் உங்கள் பிரச்சனைக்கு தீர்வும் கண்களுக்கு தென்படும். அதுவரை பிரச்சனைகள் அப்படியே பட்டா போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சனை என்றால் இவர்களுக்கு வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கும். பெரும்பாலான காலங்கள் கடன்கள் வாங்கிய கழித்து இருப்பார்கள். நகையை அடமானம் வைப்பது இவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி நிகழும் விஷயமாக இருக்கும். அதை மீட்க முடியாமல் பெரும்பாலான நகைகள் மூழ்கிப் போயிருக்கும். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்திருப்பார்கள். இவர்களுக்கு இவர்களைத் தவிர இவர்களை சுற்றி இருக்கும் அத்தனை பேருமே பிரச்சனையாக தான் இருப்பார்கள்.

ragu-ketu

எவ்வளவு பிரச்சினைகள் வாழ்வில் நடந்தாலும் அதை சமாளிக்கும் மன தைரியம் இவர்களிடம் அதிகம் காணப்படும். இவர்களுடன் இருக்கும் அனைவராலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்திருக்கும். மற்றவர்கள் இவர்களிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள வந்தால் இவர்களுக்கு கடுப்பாக இருக்கும். நான் பட்ட கஷ்டத்தை விட இது ஒன்றும் பெரிதில்லை என்ற எண்ணம் உள்ளுக்குள் இருக்கும்.

- Advertisement -

வாழ்க்கையில் இவர்கள் எதிர்பாராத துயரங்களை எல்லாம் சந்தித்திருப்பார்கள். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று எல்லோரும் தான் யோசனை செய்வார்கள். ஆனால் இந்த ராசிக்காரர்கள் இதையே தாரக மந்திரமாக கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்கு நிறைய சோதனைகள் இவர்களது வாழ்க்கையில் சந்தித்திருப்பார்கள். அறிவும், அழகும் உடையவர்களாக இருந்தாலும் இவர்களுக்கு உரிய அங்கீகாரம் இதுவரை கிடைத்து இருக்காது. ஆனால் வருகின்ற செப்டம்பர் மாதம் நிகழ இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் கிரகநிலை அம்சங்கள் இவர்களது வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவிற்கு உண்டு பண்ணி விடும் என்பதில் சந்தேகமில்லை.

gemini-mithunam

ராகு-கேது பெயர்ச்சியின் பொழுது இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும், நவக்கிரகங்களையும் வணங்கி வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி சுபிட்சமான வாழ்க்கை வாழ்வீர்கள். அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் வேறு யாருமில்லை நம்முடைய மிதுன ராசிக்காரர்கள் தான். மிதுன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை நிச்சயம் அமையும். விரக்தியில் இருந்து மீண்டு மன அழுத்தம் நீங்கி நிம்மதி பிறக்கும் நேரம் வர இருக்கிறது. மகிழ்ச்சியுடன் இருங்கள். வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
“S” என்ற முதல் எழுத்தில், உங்கள் பெயர் ஆரம்பித்தால், உங்களுடைய குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu kethu graha Tamil. Rahu ketu dosham in Tamil. Rahu ketu palangal in Tamil. Rahu ketu peyarchi palan.