ராகு கேது பெயர்ச்சியால் உண்டாகும் பாதிப்புகள் குறைய, வீட்டிலிருந்தபடியே பரிகாரத்தை எப்படி செய்வது?

rahu-kethu
- Advertisement -

இந்த வருடம், அதாவது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள், மதியம் 02.05 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. மிதுன ராசியில் இருந்து ராகு பகவான், ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். தனுசு ராசியில் இருக்கும் கேது பகவான், விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம், நவக்கிரக தோஷம் தாக்காமல் இருக்க வேண்டுமென்றால், வீட்டிலிருந்தபடியே சுலபமான முறையில் எப்படி பரிகாரம் செய்வது வீட்டில் பரிகாரம் செய்ய முடியாதவர்கள் கோவிலில் எப்படி பரிகாரம் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ள போகின்றோம்.

ராகு கேது பெயிற்சியானது மதியத்திற்கு மேல் தான் நடைபெறவிருக்கிறது. இதனால் செப்டம்பர் 1ஆம் தேதி, மாலை 6 மணி அளவில் இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் செய்வது மிகவும் நல்லது. பரிகாரத்தை செய்வதற்கு முன்பாகவே உங்களது வீட்டை சுத்தம் செய்துவிட்டு, ஸ்நானம் செய்துவிட்டு, பூஜையறையில் உள்ள சுவாமி படங்களை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

வீட்டில் தினசரி என்ன தீபத்தை ஏற்றி வைக்கிறோமோ, அந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு அது உங்க இஷ்டம் தான். அடுத்தபடியாக 9 மண் அகல் தீபங்களை எடுத்து, மஞ்சள் குங்குமம் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தயார் செய்து ஒரு தாம்பாளத் தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நவ தானியங்களை தனித்தனியாக வாங்கி 9 சிறிய கிண்ணங்களில் கொட்டி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

neideepam

பூஜை தொடங்குவதற்கு முன்பாக மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வெற்றிலையின் மேல் வைத்து, அதற்கு ஒரு குங்குமப் பொட்டு வைத்து, விநாயகரை வணங்கிக் கொள்ளுங்கள். ஒன்பது அகல் தீபங்களை ஏற்றி வைத்து விடுங்கள். தானியங்களையும், தீபங்களுக்கு முன்பாக வைத்துவிடுங்கள். நவகிரகங்களை மனதில் நினைத்துக்கொண்டு, 9 தீப சுடரையும், நவகிரகங்களாக பாவித்துக் கொண்டு, பின்வரும் மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான நவக்கிரக மந்திரம் இதோ.

- Advertisement -

ஓம் சூரிய தேவாய நமோ நமஹ!
ஓம் சந்திர தேவாய நமோ நமஹ!
ஓம் மங்கள தேவாய நமோ நமஹ!

ஓம் புதன் தேவாய நமோ நமஹ!
ஓம் குரு தேவாய நமோ நமஹ!
ஓம் சுக்ர தேவாய நமோ நமஹ!

- Advertisement -

ஓம் சனி தேவாய நமோ நமஹ!
ஓம் ராகு தேவாய நமோ நமஹ!
ஓம் கேது தேவாய நமோ நமஹ!

navadhanyam

இந்த மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு, நவகிரகங்களை மனதார வேண்டிக்கொண்டு எல்லா விதமான நவக்கிரக தோஷங்களும் நிவர்த்தியாக வேண்டும் என்று வேண்டுதல் வைத்தாலே போதுமானது. இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை இந்த ராசிக்காரர்கள் தான் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. ராகு கேது பெயர்ச்சி அன்று மட்டுமல்ல, எந்த கிரக பெயர்ச்சி வந்தாலும் சரி, சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, இப்படி எந்த கிரகம், பெயர்ச்சி அடைந்தாலும், அன்றைய தினம் இந்த முறைப்படி நவக்கிரகங்களை நினைத்து, உங்களுடைய வீட்டிலேயே தாராளமாக பூஜை செய்யலாம்.

பூஜை முடிந்தவுடன் நவதானியங்களை பசுமாட்டிற்கோ அல்லது காக்கை குருவிகளுக்கு போட்டுவிடலாம். இப்படி வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் கோவிலுக்கு சென்று நவக்கிரஹ சன்னிதானத்திற்கு தேவையான 9 நிற வஸ்திரங்களையும், 9 பூ மாலையையும், நவதானியம் இவைகளையும் வாங்கி தானமாகக் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். நவகிரகங்களை கட்டாயம் 9 முறை வலம் வரவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

navagragaml

நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்படிப்பட்ட தோஷமும், அதிகப்படியான தாக்கங்களை நமக்கு கொடுக்காமல் இருக்க, வரக்கூடிய கஷ்டங்கள் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போவதற்கு, இந்த பரிகாரங்கள் கைமேல் பலனை கொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வரப்போகின்ற ராகு கேது பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசி எது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -