அனுமனுக்கு வெண்ணைக்காப்பு, துளசிமாலை, வெற்றிலை மாலை, வடைமாலை சாத்துவதில் இருக்கும் ரகசியம்.

hanuman-compressed

இன்று அனுமன் ஜெயந்தி. மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தன்று பிறந்தவர்தான் அனுமன். ராம பக்தரான அனுமனை மனதார நினைத்து வேண்டிக் கொண்டால் உங்களின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது உண்மை. ‘ஸ்ரீராம ஜெயம்’ என்ற ஒரு மந்திரத்திற்கு இணை இந்த உலகத்தில் வேறு எதற்க்கும் இல்லை. அனுமனுக்கு மிகவும் பிடித்தவர் ராமர். ராமரது இந்த மந்திரத்தை ஜெபிப்பது மூலம் அந்த அனுமனின் பரிபூரண ஆசியினை நம்மால் பெற முடியும். அனுமனை நினைத்து வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிவிட்டது என்றால் பக்தர்கள் அனுமனுக்கு வெண்ணை காப்பு, செலுத்துகின்றேன் என்றும் அல்லது வடை மாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை இவற்றில் ஏதாவது ஒன்று சூட்டுகின்றேன் என்றும் வேண்டிக் கொள்வார்கள். இன்றைக்கு அனுமன் கோவிலுக்கு சென்று சிலர் இந்த வேண்டுதல்களை நிறைவேற்றியும் இருப்பீர்கள் அல்லவா? ஆனால் அனுமனுக்கும், குறிப்பாக இந்த வெற்றிலை, துளசி, உளுந்து வடை, வெண்ணை இந்த நான்கு பொருட்களுக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்பதை பற்றி இந்த பதிவில் சற்று விரிவாக காண்போமா.

hanuman

முதலாவதாக வெண்ணை காப்பு ஏன் சாத்துகின்றோம் என்பதற்கான விடையை பார்ப்போம். ராவணனுக்கும், ராமனுக்கும் யுத்தம் நடந்த ராமாயண கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த யுத்தத்தில் ராமருக்கு உதவியாக இருந்தவர் அனுமன். அசுரன் ராவணனின் பானத்திலிருந்து வெளிவந்த அன்பிலிருந்து, ராமனை காப்பதற்காக அனுமன் முன் நின்றார். ராமனை தாக்க வந்த அம்புகளை எல்லாம் அனுமன் தடுத்து விட்டார். இதன் மூலம் அனுமனின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயத்தில் ஏற்பட்ட எரிச்சலைத் தணித்து கொள்வதற்காக குளிர்ச்சி வாய்ந்த வெண்ணையை தன் உடம்பு முழுவதிலும் பூசிக் கொண்டார் அனுமன். மேலும் ராவணன் ஏய்த அம்புகள் அனுமனின் உடம்பை துலைக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பாகவும் வழுவழுப்பான வெண்ணையை தன் உடம்பின் மீது பூசிக் கொண்டாராம். இதனால் தான் வெண்ணை காப்பினை அனுமனுக்கு செலுத்துகின்றோம். அனுமனுக்கு வெண்ணைக்காப்பு  சாத்தினால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம்.

பெருமாளுக்கு துளசி வாசம் மிகவும் பிடித்தது. துளசியில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. பெருமாள், ராமர் எல்லோரும் அந்த விஷ்ணு அம்சம் தானே.. துளசி மாலையை அந்த அனுமனுக்கு சாத்துவதால் நம் குடும்பம் செல்வ செழிப்பினை பெறும். அதுமட்டுமல்லாமல் கல்வித்தடை நீங்கவும் அனுமனுக்கு துளசி மாலை அணிவிக்கலாம்.

அடுத்ததாக வெற்றிலை மாலை. நம் கலாச்சாரத்தில் ஒருவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றால் உதிரிப் பூக்களை அட்சதை போட்டு தான் ஆசீர்வாதம் செய்வது வழக்கம். ‘ராமர் உங்களை மீட்பதற்காக வந்து கொண்டிருக்கின்றார்’ என்ற செய்தியை கூறுவதற்காக அசோகவனத்தில் இருந்த சீதையை அனுமன் சந்திக்கச் சென்றார். இந்த நல்ல செய்தியை கொண்டுவந்த அனுமனை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று சீதை எண்ணினாள். ஆனால் ஆசிர்வாதம் செய்வதற்காக அவளருகில் எந்த பூவிம் இல்லை. அசோகவனத்தில் வெற்றிலை கொடி தான் இருந்தது. இதனால் அந்த வெற்றிலையை எடுத்து அனுமனின் தலையில் வைத்து உனக்கு அந்த ராவணனால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றும். ‘அசோக வனத்திலிருந்து என்னை காப்பாற்றுவதற்காக நீங்கள் எடுத்த முயற்சியானது வெற்றி பெறும் என்றும், நீண்ட ஆயுள் உடன் இருப்பாய் என்றும்’ சீதை அனுமனுக்கு ஆசிர்வாதம் செய்தார்.

- Advertisement -

hanuman

நம் உடலுக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மையும், விஷப்பூச்சிகள் கடித்தால் அந்த விஷத்தை முறிக்கும் தன்மையும் பொதுவாக வெற்றிலைக்கு உண்டு. ஹனுமன் காட்டுப்பகுதியை கடக்கும்போது, குளிர் அவரை தாக்காமல் இருக்கவும், விஷபூச்சிகளிலிருந்து அனுமனை காப்பாற்றவும் சீதாதேவி அவர்கள் வெற்றிலை மாலையை அனுமனுக்கு அணிவித்தார்கள். அனுமனுக்கு வெற்றிலை மாலையை, வெற்றிமாலையாக சூட்டிய சீதா தேவிக்கு ராவணனிடமிருந்து விமோர்சனம் கிடைத்தது. இதைப் போலவே கஷ்டத்தில் இருக்கும் பக்தர்களின் பிரச்சினைகளுக்கும் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Hanuman

ஒருவருக்கு திருமண தடை, பண கஷ்டம் இருந்தால் அதற்கு ராகுவும் ஒரு காரணம். ராகு தோஷத்தில் இருந்து விடுபட அனுமனுக்கு உளுந்து வடை மாலை அணிவிப்பது மிகவும் சிறந்தது. எந்த வித தோஷமும் அனுமனை நெருங்க முடியாது. ராகுவையும் தன்வசம் வைத்துள்ளார் அனுமன். சிலருக்கு ஜாதகத்தில் இருக்கும் ராகு தோஷத்தால், வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ராகுவுக்கு உகந்தது உளுந்து. ராகுவுக்கு பிடித்தமான இந்த உளுந்தை வைத்து அனுமனுக்கு மாலை அணிவிப்பதன் மூலம் ராகு தோஷத்தில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். அனுமனுக்கு உளுந்து வடை சாத்துவதால், நம் ஜாதகத்தில் உள்ள ராகு தோஷம், நமக்கு எந்தவிதமான சங்கடத்தையும் கொடுக்காது என்று கூறுகிறது சாஸ்திரம்.

இதையும் படிக்கலாமே
எதிரிகளை வெல்ல சுலபமான துர்க்கை வழிபாடு