ராகுல் மற்றும் பாண்டியா கிரிக்கெட் விளையாட தடை – இந்திய கிரிக்கெட் வாரியம்

rahul-pand

சென்றவார இறுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று டிவியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள் நமது இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர்களான KL ராகுல் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

pandiya

அது ஒரு பொழுதுபோக்கு சார்ந்த “டாக் ஷோ” அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர். ஆனால் , பெண்கள் குறித்த கேள்விகளுக்கு இருவரது பதிலும் சிறிது ஆபாசமாகவும் எதிர்மறையாகவும் இருந்து. இது இந்த நிகழ்ச்சியினை கண்டவர்கள் மூலம் எதிர்ப்பு அலையாக மாறியது.ராகுல் மற்றும் பாண்டியா மீது மக்களுக்கு வெறுப்பு உண்டானது.

குறிப்பாக ராகுல் தனது அறையில் இருந்த காண்டம் பாக்கெட்டை என் அம்மா பார்த்துவிட்டார் என்று கூறியது மேலும், பாண்டியா பல பெண்களுடன் பழகும் தன்மை தனக்கு இருப்பதாக கூறியது போன்ற உரையாடல்கள் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இதனால் மக்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் இவர்களது மீது கோபம் கொண்டது.

KL and HP

இதன் காரணமாக பெண்களை பற்றி தவறான கருத்துகளை கூறியதற்காக இந்த இரு வீரர்களுக்கும் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. மேலும், விசாரணை இன்னும் முழுமையடைய வில்லை. எனவே முழு விசாரணைக்கு பிறகு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவும் படிக்கலாமே :

ஓய்வு குறித்த தனது கருத்தினை முதன் முறையாக வெளியிட்ட – கிங் கோலி வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்