இனியாவது ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் . ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோருடைய தடையை விலக்கி கொள்கிறோம் – பி.சி.சி.ஐ

rahul-pand

கடந்த பல வாரங்களாக நாம் அனைவரும் எதிர்பார்த்தது ராகுல் மற்றும் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்வு குற்றிது தான். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இருவரும் பெண்கள் குறித்த கூறிய சர்ச்சையான கருத்தினால் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

KL and HP

மேலும், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பயணத்திலிருந்தும் அணியில் இருந்து நீக்கியது இந்திய கிரிக்கெட் வாரியம். பல வீரர்களும் , ரசிகர்களும் அவர்களது தப்பை மன்னித்து அணியில் இணைத்துக்கொள்ளும்படி சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்தினை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் பி.சி.சி.ஐ இவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை தெரிவித்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அணி மற்றும் வீரர்களாகிய அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் நிபந்தனையோடு அவர்களது தடையை தளர்த்தி கொள்கிறோம் என்று அறிவித்தது.

rahul

மேலும், இனியாவது விளையாட்டில் கவனம் செலுத்தி தேவையில்லாத இடங்களில் தேவையில்லாதவற்றை பேசாமல் விளையாட்டில் முழு கவனம் செலுத்துமாறு ரசிகர்கள் தங்களது வேண்டுகோளை ராகுல் மற்றும் பாண்டியாவ்க்கு முன்வைத்து இருக்கின்றனர்.

இதையும் படிக்கலாமே :

இப்படிப்பட்ட காரணத்திற்காக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது இதுவே முதல்முறை – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்