இப்படிப்பட்ட காரணத்திற்காக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது இதுவே முதல்முறை – வீடியோ

- Advertisement -

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வென்று முதலில் 157ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

koli dhawan

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 உறுதி செய்தார். மேலும், கேப்டன் கோலி 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -

இந்திய அணியின் வெற்றிக்கு 114 இன்னும் தேவை என்ற நிலையில் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட காரணம் சூரியனில் இருந்து அதிக அளவு வெப்பம் மைதானத்தின் மீது விழுவதால் வீரர்களால் சரியாக விளையாட முடியவில்லை. இதன் காரணமாக ஆட்டம் விளையாட நிமிடம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

- Advertisement -

இதன் காரணமாக போட்டி 30 நிமிட தாமதத்திற்கு பிறகு துவங்கியது. இது போன்ற நிகழ்வு கிரிக்கெட் வரலாற்றில் நிகழவில்லை என்றே கூறலாம். பல்வேறு பிரச்சனைகளால் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சூரியன் ஒரு பிரச்னை என்று ஆட்டம் பாதித்தது இதுவே முதல் முறை.

இதையும் படிக்கலாமே :

சேவாக் போன்று அப்பர்கட் . சச்சின் போன்று கவர் டிரைவ் . இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை – டிராவிடின் வளர்ப்பு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -