ரிஷப் பண்டை தனது குழந்தையை பார்த்துக்கொள்ள அழைத்த ரோஹித் – ட்வீட்

pant

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் அவரது குழந்தைகளை கவனித்து கொள்ள ரிஷப் பண்டை வரச்சொல்லி வசை பாடினார் என்பது நாம் அறிந்ததே. அதன்பிறகு பண்ட் அவரது குழந்தைகள் மற்றும் பெயினின் மனைவி ஆகியோரை சந்தித்து போட்டோ எடுத்து வைரலானது.

paine

இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மா தற்போது மீண்டும் நகைச்சுவையாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டு பண்டை கலாய்த்துள்ளார். அந்த பதிவில் ரோஹித் குறிப்பிட்டதாவது : பண்ட் நான் ஒரு விஷயத்தை கேள்விப்பட்டேன். நீ நன்றாக குழந்தைகளை கவனித்து கொள்வாய் என்று அதனால் இப்போது எனக்கு உன் உதவி வேண்டும்.

என் மனைவி ரித்திகா தற்போது தான் அழகான பெண் குழந்தையை பெற்று எடுத்தார். அதனால் நீ என் வீட்டிற்கு வந்து என் குழந்தையை கவனித்து கொண்டால் என் மனைவி சந்தோஷப்படுவார் என்று ஜாலியாக ஒரு ட்வீட்டினை பதிவிட்டுள்ளார். ரோஹித் சர்மாவிற்கு டிசம்பர் 30ஆம் தேதி பெண்குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் பங்கேற்காத ரோஹித் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் 12ஆம் தேதி துவங்க உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளார்.

இதையும் படிக்கலாமே :

ஆஸி பந்துவீச்சாளர் ஸ்டார்க்-க்கு ஆதரவாக பேசிய விராட் கோலி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்