நியூஸி அணிக்கு எதிரான டி20 தொடரில் கோலிக்கு மாற்றாக நியூசிலாந்து பறக்க உள்ள முன்னணி வீரர்

rahul

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வென்று முதலில் 157ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

koli dhawan

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். மேலும், கேப்டன் கோலி 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்நிலையில் கடைசி இரு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கடைசி இரு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கோலிக்கு மாற்றாக முன்னணி இந்திய வீரரான ராகுல் அணியில் இணைய உள்ளார் .

rahul

தடையிலிருந்து மீண்ட ராகுல் ஒருநாள் போட்டி முடிந்ததும் இந்திய அணியில் இணைவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஒருநாள் தொடரில் இணைய பாண்டிய நியூசிலாந்து சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தோனியின் கீப்பிங் இடத்திற்கு வர இவர் இதனை தோனியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் அடுத்த 15 ஆண்டுகள் இவர்தான் டாப் – கில்கிறிஸ்ட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்